புதுமையின் நாயகன் பாரதி
புதுமையின் நாயகனே !!
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
அச்சம் அழித்தொழித்த
அஞ்சா பெருங்கவியே /
துச்சம் என்றுயிரைத்
துடைத்து எறிந்தவனே /
ஞாயிறே மறையாத
ஆங்கிலப் பேரரசை /
விடுதலைக் கவிதைகளால்
வீரமொடு எதிர்த்தாயே /
பாப்பா பாட்டோடு
பாஞ்சாலி சபதமும் /
எப்போதும் இனித்திடுமே
கண்ணன் குயில்பாட்டும் /
மதுரகவி படைத்த
புதுமையின் நாயகனே /
அமுதத் தமிழினிலே
தினம்பாடி வாழ்த்துவொமே !!
-யாதுமறியான்.