ஆடுவோமே பாடுவோம்
ஆடுவோம் பாடுவோம் ஆனந்தக் கூத்தாடுவோம்
ஆடியே ஆயன் திருநாமம் ஆயிரம் பாடியே
மாயோன் மாலவன் திருத்தா ளொன்றே
மாயமாம் பிறவித்துயர் போக்கும் அருமருந்து
பற்றிடுவோம் அதையே இப்படி ஆடிப்பாடி