என்னை பொறுத்தவரை நீ
அழகாய் ஒரு வானவில் நீ
அரிதான பனித்துளி நீ
அன்பான அதிரடி நீ
ஆளை மயக்கும் அடிவானம் நீ
எதுகை இல்லா மோனை நீ
எதிர்த்து நிற்கும் அலையும் நீ
தலைகோதும் காற்றும் நீ
என் தாலாட்டு பாடல் நீ
பேச முடிந்த கவிதை நீ
நடந்து செல்லும் பூவும் நீ
கண்கள் சிமிட்டும் ஓவியம் நீ
உலகம் காணாத காதலும் நீ