பாரி மகளிர் வரலாற்றுத் திரிபுகள்
பறம்பு மலையை ஆட்சி செய்த பாரி வள்ளலின் மக்கள் அங்கவை சங்கவை என்பது உண்மையா பொய்யா என்பதை ஆய்ந்தறிந்து அங்கவை சங்கவை என்போர் வேறு பாரி மகளிர் வேறு எனவும் அவை பிற்காலத்தில் திரித்து கூறப்பட்டவை எனவும் நிருவியுள்ளதோடு மட்டுமன்றி பாரியைக்கொன்றது மூவேந்தர்கள் அல்ல என்பதையும் சங்க இலக்கியங்களிலிருந்து தக்கச்சான்றுகளோடு உறுதிபட நிரூபித்திருக்கிறார் நூலாசிரியர்.இந்நூலை திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகம் கபிலர் விழாவில் 20/07/2024அன்று வெளியிட்டுள்ளது என்பது குறிக்கத்தக்கது