ஏன்? ஏன்? ஏன்?

இயற்கையை அழகாக படைத்த அந்த இறைவன்
மனிதர் மனதை மட்டும் அழுக்காக படைத்து விட்டான்
ஏன்?

மனிதர்கள் மட்டும் இல்லாமல், மிருகங்களுக்கும் கூட ரத்தம் சிவப்பு தான் இன்நிலையில் இனம், மதம், ஜாதி என பிரித்தது
ஏன்?

நாம் வாழும் காலம் கொஞ்சமெ,
அந்த சில கொஞ்ச நாட்களில் சந்தொஷத்தை கெடுப்பது
ஏன்?

மன நிம்மதியை கெடுப்பது ஏன்?
மன அழுத்தத்துக்கு ஆழாகுவது ஏன்?
எனக்கு மட்டும் தான் கஷ்டம் என்று நினைப்பது ஏன்?
பிரச்சனைகள் எனக்கு மட்டும் தான் என்று நினைப்பது ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?

சந்தேகம் என்னும் பேய்,
நான் பெரிதா நீ பெரிதா என்னும் தலக்கணம்,
நம்பிக்கை, பொறுமை இல்லாத மனிதர்கள்,
விட்டுக்கொடுக்கும் மனம் இல்லாதவர்கள்,
நொடிக்கு நொடி கோபம் கொள்பவர்கள்,
உதவி செய்யும் மனம் இல்லாதவர்கள்,
பாசம் அன்பு இல்லாதவர்கள்,
தன் நலத்தயெ நேசிக்கும் சுயநலவாதிகள்,
கருணை இல்லாதவர்கள்,
மற்றவர்கள் மனதை புண்படுத்துவோர்கள்,
இப்படியெ சொல்லிக்கொண்டே போகலாம்.....

மனிதா இப்போது புரிந்ததா ஏன் என்னும் கேள்விக்கு பதில்,
உன்னை நீயே புரிந்து கொண்டாள் சுகமான வாழ்வு
இல்லை உனக்கு சுமையான வாழ்வு.
இதை நீதான் தெரிவுசெய்து கொள்ளவேண்டும் மனிதா.

எழுதியவர் : (4-Feb-12, 12:46 am)
பார்வை : 469

மேலே