இந்தியா வல்லரசாகுமா (பகுதி 1 )?
நாட்டிற்காக நற்பணி செய்த
தியாக செம்மல்கள் உயிரையே
தியாகம் செய்தார்கள் உயிரை
தியாகம் செய்து,உயிகொல்லிகளிடம்
நாட்டை விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்.
ஆங்கிலயனே நம்மை ஆண்டிருந்தாலும்
வறுமை இல்லா வளர்ச்சியடைந்த
நாடாக இன்று இந்தியா இருந்திருக்கும்.
ஒற்றுமை இல்லாவிட்டாலும் நாகரிகத்தோட
சேர்ந்த நாசூக்கான தீண்டாமை இருந்திருக்காது
காதலும் நட்பும் மட்டும் இல்லாமல்
இருந்திருந்தால் தீண்டாமை இந்நேரம்
இந்திய நாட்டில் துளிர்விட்டு எரிந்திருக்கும்.
நான் ஆட்சிக்கு வருகிறேன் ஒரு
ரூபாய் அரிசி தருகிறேன் கூடவே
இலவச அடுப்பு தருகிறேன் பெண்டிரே !
விரைவில் சமைத்துவிட்டு தொடர்கதை
பார்பதற்கு தொலைகாட்சி பெட்டியையும்
தருகிறேன் பெண்களே !சோம்பலாகிவிடுங்கள்
என்பதை போல் இருந்தது இந்த அறிவிப்புகள் .
நான் ஆட்சிக்கு வருகிறேன் இலவச
அரிசி தருகிறேன் ,ஆடு மாடுகளை
தருகிறேன் இந்த அறிவிப்புகள் எல்லாம்
எப்படி இருக்கிறது தெரியுமா ?
வேலைக்கு செல்லாதா பெரியவர்கள்
இல்லாதவர்கள் வீட்டில் இருக்கும் பிள்ளைகளே
பள்ளிக்கு செல்லாதீர்கள் மாறாக நாங்கள்
தரும் ஆடு மாடுகளை மேயுங்கள் என்பதை
போல் இருக்கிறது அல்லவா ?.....
அவர்கள் அதைதான் செய்தார்கள்
நான் வந்தால் இதை செய்வேன்
என்று போட்டி போடுகிறார்கள் .
ஏன் போடுகிறார்கள் போட்டி ?
எதற்காக போடுகிறார்கள் போட்டி ?
இவர்கள் என்ன அயல் நாட்டவர்களா ?
இல்லை அந்நியர்களா?