வெள்ளப் பூண்டு
சாம்பாரில் மட்டுமல்ல
சரஸ்வதி பூஜையிலும்
சரஸ்வதியின் விழி வெண் படலமாய்
சந்தோசமாய் பங்கெடுப்பேன்
சரி என என்னுடன் நட்பான மிளகையும்
சரஸ்வதியின் கருவிழி கண்மணியாக்குவேன்..
சர்ரென்று எனை பிரித்து
சட்டியில் வறுத்து என்னை
சாகடித்தாலும் மனிதர்க்காய் மணப்பேன்....!
குறிப்பு:
கவிதை கருத்து உபயம் ரசிகர் நாகமணி
பொருள் நயம்
வெள்ளப் பூண்டு என்பது பூஜையிலும் பயன்படுகிறது, மிளகையும் பயனுள்ளதாக்கிறது, மனிதர்களுக்கும் பயன்படுகிறது, இருந்தும் இறந்தும் ஆயிரம் பொன்னுக்கு சமமான யானைக்கு தான் குறைவில்லை என்று வெள்ளப் பூண்டு ஆன்மீகத்தை, நட்பை, மனித வாழ்கையை இங்கே படம் பிடித்துக் காட்டுகிறது.