உனக்கு தெரியாமல் போனதடி காதல் 555
பெண்ணே.....
காணாமல் கண்ணீர் வடிக்கும்
என் கண்களுக்கு...
எப்படி புரிய வைப்பேன்...
அவள் (நீ )
கலைந்த கனவு என்று...
அள்ளிப் பருக முடியாமல்
ஆர்பரிக்கும்...
என் இதழ்களுக்கு,
எப்படி புரிய வைப்பேன்...?
அவள் (நீ )
கானல் நீர் என்று...
அணைக்கத் துடிக்கும்
என் கரங்களுக்கு...
எப்படி புரிய வைப்பேன்...?
அவள் (நீ )
அழகான வானம் என்று...
நினைத்து வாடும்
என் உள்ளத்துக்கு...
எப்படி புரிய வைப்பேன்...?
அவள் (நீ )
உயரே பறந்து சென்ற
பறவை என்று...
புரிய வைக்க
புதிய வழிகள்
தேடுகிறேன்...
புதிய காதல் வாழ்க்கையில் ...
அனாதையாய் கிடக்கிறது...
எனது அலை பேசி
என்னை போலவே...
அவளது (உன் )
அழைப்பு இல்லாமல்...
மறைக்கப் பார்த்தாலும்
மறையாத
உணர்வுகள்...
காதலும்...
காமமும்...
மை இல்லாத
பேனா எழுதும்...
எழுத்துகளைப் போல்...
உனக்கு தெரியாமல் போனதடி..
என் கவிதைகளும் காதலும்.....