கடமைக்கு முற்றுப்புள்ளி வைத்தான்

பெற்று
வளர்த்து
படிக்க வச்சு
வாழ கத்து குடுத்தேன்

பாசம்
நேசம்
அன்பு எல்லாம்
சொல்லி கொடுத்து
வளர்த்தேன்

சிறகு விரிக்கவும்
பறந்து செல்லவும்
கற்று கொடுத்தது நான்தான்

இவள் தான்
காதலி சொன்னதும்
கட்டி வச்சது நான்தான்

காரியம் முடிந்து
போன பிறகு
வீடு பாத்துட்டன் எனக்கு
அந்த முதியோர் இல்லத்தில்
சேர்துட்டான் - அவன்
கடைக்கு முற்றுப்புள்ளி
வச்சுட்டன்

எழுதியவர் : முள்ளு சிவா (12-Mar-12, 3:30 pm)
சேர்த்தது : சிவா அலங்காரம்
பார்வை : 158

மேலே