தனிமை

என்னுயிர் தோழி
என்னுடன் தான் இருப்பாள்;
எனக்காகவே சிரிப்பாள்,
எனக்காகவே அழுவாள்,
நான் பேசினாள்
அவள் பேசுவாள்,

எங்களுக்குள் பலமுறை
சண்டை போட்டதுண்டு,
ஆனால் ஒருமுறை கூட
என்னை விட்டு விலகி
சென்றதில்லை.

என் கூடவே இருப்பதாலேயோ என்னவோ
யாருக்கும் பிடிக்காத என்னை
அவளுக்கு மட்டும் பிடிக்கும்.
எனக்கும் தான்.

நான் பிறந்ததிலிருந்து ஒரு நாள் கூட
என்னை அவள் பிரிந்ததும் இல்லை,
பிரிய நினைத்ததும் இல்லை.

நான் எழும் போது சிரிப்பவள்,
பின் உறங்கும் போதும
தலையை கோதிச்செல்வாள்.

என்னை புரிந்து கொண்டவள்
அவள் மட்டுமே.

அவள் இந்த உலகில்
எனக்காக் படைக்கப்பட்டவள்,
எனக்காக மட்டுமே படைக்கப்பட்டவள்.
என்னை தவிர அவளுக்கு
யாரும் கிடையாது.
யாரையும் தெரிந்து கொள்ள
அவளுக்கு விருப்பமும் இல்லை.

என்னுடனயே இருக்கும் அவள்,
என்னுடன் யாரும் இருந்தாள்
விலகிச்செல்வாள்.
அவர்கள் சென்ற பின்
சிரித்துக்கொண்டெ
மறைவிலிருந்து வருவாள்.

இதுவரை இது ஏன் என்று
எனக்கு புரிந்த்தில்லை.

கேட்டாள் மட்டும் சொல்லிவிடவா போகிறாள்!!!

நான் விரும்பும் அவளை
நான் கூறக்கேட்டு என்
நண்பர்களுக்கும் காண ஆசை,
ஆனால் ஆயிரம் முறை கேட்டும்
அவர்கள் முன் வர மறுத்துவிட்டாள்.

என்னுடன் வாழும் என்
அந்தரங்க தோழியை உங்களுக்கும்
அறிமுகபடுத்த
ஆசைதான்.

ஆனால் வரமறுக்கிறாளே,
வரமறுக்கும் அவளை
ஒருமுறையேனும்
உங்கள் முன் காட்டிவிட
ஆசைப்படுகிறேன்.

யார் என்று சொல்கிறேன்
தெரிகிறதா பாருங்கள்.

அவள் தான் என்
தனிமை

எழுதியவர் : ராஜேஸ்குமார் (2-Apr-12, 11:06 am)
Tanglish : thanimai
பார்வை : 378

மேலே