குழந்தையின் புன்னகை.
அறியாத முகங்களையும் ....
வசீகரித்து விடுகிறது
குழந்தையின் புன்னகை.
மனிதர்களுக்கேற்ப ...
மாறுவதில்லை அதன் அளவுகள்.
ஒரு பிரளயத்தின் வலியையும்..
அது நீவி விடுகிறது...
ஒரு மயிலிறகினைப் போல.
எதிர்பார்ப்புகள் எதுவும் அற்று...
விரியத் துவங்கும்....
அந்தப் புன்னகையின் முன்...
வளைந்துவிடுகிறது..
எவரது வானமும்.
நாட்களின் அடுக்குகளில்...
ஒரு குழந்தையிடமிருந்து
ஒளியத் துவங்கும் அதன் புன்னகை...
ஒளித்து வைத்துவிடுகிறது...
ஒரு சுவர்க்கத்தின் சாவியை...
யாரும் மீட்டெடுக்க இயலாதபடி.