வேண்டும் வரம் தா

இன்னலில் நான் தவிக்கையில்
இயற்கையே! நீ இன்பம் தா
தனிமையில் நான் தவித்திருக்கையில்
தென்றலே! நீ பக்கம் வா
காலம் முழுவதும் காதல் செய்ய
நேசமுள்ள உறவை தா
நாட்கள் கடந்தாலும் மறக்க நினைக்காத
நல்ல நட்பை தா
எல்லாவற்றிற்கும் மேலாக
என்னை நேசிக்கும் உறவுகளை
சுவாசிக்க அன்பை தா…

எழுதியவர் : anithbala (11-Jun-12, 3:41 pm)
சேர்த்தது : Anithbala
Tanglish : vENtum varam thaa
பார்வை : 221

மேலே