சுமக்க முடியாத பாவி..

உருவம் இல்லாத
அவள் கருவறையில்-எனக்காக
உயிரையும் கொடுக்க துணிந்தவள்...!!!

பத்து மாதம் வலியையும்
பத்து நிமிடம்....
மறுபிறவியும் எடுத்து
என்னை பெற்றெடுதவள்..
என் அழுகையை கண்டதும்
இந்த உலகை மறந்தவள்
என் பசித்திர...
அவள் ரத்தத்தை உணவாய்
பகிர்ந்தவள்....!!!

எனக்கு என்ன வேண்டும்
என்பதை எண்ணி எண்ணி கொடுத்தவள்!
என் எதிர்காலத்தை நினைத்து
அவள் வாழ்க்கையை மறந்தவள்...!!!

அவள் தோளிலே நான்
உறங்கிய போது
அவள்...
தூக்கத்தையும் மறந்தவள்
நான் "அம்மா" என்று
அழைத்த போது
என்னை கண்டு வியந்தவள்...

எனக்கு பேச கற்று கொடுத்த
முதல் ஆசான் அவள்...
என் கை பிடித்து
நடக்க வைத்த- முதல்
படி அவள்...

எத்தனை தவறுகள் செய்தலும்
மன்னிக்க தெரிதவள்...!!!
என் முன்னேற்றத்திற்கு
ஏணியாய் நின்றவள்...!!!

எல்லா வற்றையும் எனக்காக
தூக்கி போட்டவள்....
அவள் மரணத்திற்கு- எனக்கு
தூக்கி செல்ல
அனுமதி எல்லை...

அவளுக்கு முன்னால் நான்
நடந்து செல்கிறேன்...
என் கண்ணில்
கண்ணிரோடும்...

என்றும் மறக்க முடியாத
அவளின்...
நினைவுகளோடும்....
கடைசிவரை அவளை சுமக்க
முடியாத பாவியாய்...

எழுதியவர் : மணிமாறன் (8-Aug-12, 11:38 am)
பார்வை : 193

மேலே