வாழ்க்கைப்பாதை !

நீ செல்லும் பாதை கரடுமுரடாக
உன் பயணம் நெருப்பின் அனலாக
உன் பாதங்கள் முள்ளின்மேல் நடப்பதாக
இருந்தால் கவலை கொண்டு வெறுக்காதே...
இந்த நல்லப்பாதை உன்னால் சீரமைக்கப்படுகிறது ...
பின்பு அப்பாதையில் வருவோரெல்லாம்
உன்னை தன் மனத்தால் வாழ்த்தையில்
பட்ட துயரமெல்லாம் பறந்துபோகும் வெகுதூரம்
ஆம் நாம் சீராக சுகமாக செல்லும் பாதையெல்லாம்
நமக்கு முன்னர் பலர் சுமைகளை சுமந்து
சுவடுகள் பதித்த வாழ்க்கைப்பாதை !
மறவாதே அவர்களை மட்டுமல்ல
அப்படி ஒரு பெயர் உனக்கும் ஏற்ப்பட !
தேர்ந்தெடு ! தேர்ந்திடு !
என்றும் உன் வாழ்க்கை உன் கையில் ...

எழுதியவர் : கவியாழினிசரண்யா.. (11-Sep-12, 11:24 am)
பார்வை : 246

மேலே