அணு உலை எதிர்ப்பு !
அணு எதிர்ப்பு !
இது போராட்டம் அல்ல போதனை ,
அகிம்சை என்ற ஆயுதம் ஏந்தி
அழிவில் இருந்து மனித இனத்தை காக்க வந்த
மெசியாக்களின் சங்கமம் !
நெருப்பு சுடும் என தெரிந்தும்
தொட நினைக்கும் ஆட்சியாளர்கள்
தடுக்க நினைக்கும் பாமரர்கள் !
சாவுக்கு விலைபேசுவோர் இங்கே கடவுள்களாக தெரிகின்றனர்
உயிர்ப்பை தர நினைப்போர் நரகாசுரனாக காட்டப்படுகின்றனர்!
எட்டப்பன் ஆட்சி செய்தால்கட்டபொம்மன் திருடன்தானே ?
அரசின் திட்டம்
மின்சாரம் வேண்டும் என கேட்டவனுக்கு
மின்சார சுடுகாடு தரும் விசித்திர திட்டம் !
இலவசத்தை விரும்பும் மக்களுக்கு
சாவை இலவசமாக வழங்கும் தாயுள்ளம் !
இலவசத்தை எதிர்த்தால் தேச துரோகி
அதனால் வாயை மூடு !
ஒன்று சேராதே கூட்டு சதி
அதனால் விலகிப்போ !
அகிம்சை
அறவழி
அமைதி
அப்பாவித்தனம்
அம்மா
என்ன செய்ய இனி ....
அகரத்தில் தொடங்கும் வார்த்தைகள் சரியில்லையே!
இருந்தாலும் நம்பிக்கையோடு
மனிதம் காக்க
உலகை காக்க
உணர்வோடு தொடர்கிறது
உயிரை பணயம் வைத்து போராட்டம்