[336 ] குறு குறு பாக்கள் -(7 )

வெயிலும் பனியுமா
விளைவித்தது
இந்தச் சுருக்கங்களை!
இல்லை இல்லை
விழுந்த பள்ளங்களை
விட்டெழுந்த
முயற்சிகள் அவை!
******************* *********************
ஓட்டைப் பாத்திரத்தில்
ஊற்றுகிறாயே
அமுதத்தை..
தமிழை..
ஒருவருக்கும் பயனின்றி
ஒழுகிடவோ?
****************** ***********************
சிவனே என்றிருப்பவனுக்கே
விஷத்தைக் கொடுத்தது
இந்த உலகம் ..
சீறி எழுபவனுக்கு
அமுதமா
கொடுக்கப் போகிறது..?
*************** ************************

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (22-Sep-12, 4:00 pm)
பார்வை : 91

மேலே