// கவிதை உறவு..!! \\

கனவுகளுக்கு சிறகுவைத்து
கற்பனைக்கு குதிரைபூட்டி
எழுத்துகளால் தேர்செய்து
எண்ணங்களால் வண்ணந்தீட்டி
அன்புமணிகள் கோர்த்து
அறிவுகுஞ்சம் கட்டி
இனியதமிழ் சொல்லெடுத்து
இன்பச்சுவை திரட்டி
இயல்புகளை தொடுத்து
இன்னல்களை விரட்டி
கவிக்குழவி செய்துவைத்து
கணினிவழி நிதம்நாடி
உள்ளங்களால் பூரித்து
உணர்வுகளால் பாராட்டி
வழித்துணையாய் பயணித்து
வாழ்கின்றோம் உறவாடி..!!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (8-Nov-12, 11:40 am)
பார்வை : 331

மேலே