லொள்ளுக்கூ-கேஎஸ்கலை

ராத்திரிக்கு திங்கிறே பரோட்டா
அடி கருப்பாயி ஒனக்கும் கொஞ்சம்
கொண்டு வந்து தரட்டா?
田田
அமைச்சருக்கு மேடையில விக்கல்
அது-மக்கள் சொத்த திருடி தின்னதால
வந்திருக்கும் சிக்கல் !
田田
வீட்டவிட்டு ஓடிப்போன தம்பி
திருடிப்புட்டு மாட்டிகிட்டு-இப்ப
எண்ணுறாரு கம்பி !
田田
(நகைச்சுவைக்காக எழுதியது....லிமரைக்கூ எள்ளலுடன் இருக்க வேண்டும் என்று தோழர் அகன் கூறியதால்)

எழுதியவர் : கே.எஸ்.கலை (16-Dec-12, 3:13 pm)
பார்வை : 218

மேலே