பசுபதி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பசுபதி |
இடம் | : புதுச்சேரி |
பிறந்த தேதி | : 04-Jul-1974 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Sep-2018 |
பார்த்தவர்கள் | : 1985 |
புள்ளி | : 121 |
நீயும் நானும் எழுதிடும்
வண்ண ஓவியம் குழந்தையோ
முடியும் முன்னே விடிந்திடும்
இரவு வானம் அனுதினம்
முயன்று பார்க்க முயல்கிறேன்
உன் கருணை வேண்டும்
தினம் தினம்
பத்து மாதம் தவணைதான் - உன்
கையில் ஏந்தும் குழந்தையாய்
இனிய பொழுதுகள் நினைவிலே
நினைக்கும்தோறும்
இனிமையே...
சிறந்த ஓவியன்
விருது
கொடுக்க தேடுகிறேன்
சிக்கவில்லை
இந்த வண்ணத்துபூச்சி
சிறு கூட்டுக்குள்
எத்தனை கைவண்ணம்
சிறகினில் செம்மையான
ஓவியமே...
அதனாலோ பறக்கிறது
உயர உயர...
பிறர்
உழைப்பில்
இனிமை காண்பவன்
விட்டுவைக்வில்லை
தேன் கூட்டையும்...
பிறர்
உழைப்பில்
இனிமை காண்பவன்
விட்டுவைக்வில்லை
தேன் கூட்டையும்...
இன்னல்கள்
எத்தனையோ
இசைந்து ஏற்றனர்
அன்னியன்
வெறிக்கு
சிந்திய
இரத்தங்கள்
மேதினில்
எண்ணிலடங்கா
திண்ணியராக
வலம் வந்த
சுதந்திர வீரர்கள்
மண்ணின்
விதைகள்
மறந்து தான்
போனரோ
இன்றைய
இளைஞர்கள்
பெற்ற சுதந்திரம்
சுரண்டப்படுகிறது
தவணை
முறையில்
பல சட்டங்கள்
போடப்பட்டு...
விழிகள்
திறந்திருக்கும்
போதே
முழிகள்
திருடப்பட்டுவிடும்
எச்சரிக்கை
வேண்டும்
இல்லையேல்
இன்னொரு
சுதந்திரத்திற்கு
ஆயத்தமாக
வேண்டும்
காந்தியையோ
சுபாஷையோ
எங்கே தேடுவது ?
மழை துளிகளாக
மக்கள் கூட்டம்
அணை
கட்டின
' ஏன்டா ஏதாவது ஒரு வேலைக்கு போகக் கூடாதா இப்படியே சுத்திகிட்டே இருக்கியே என மரகதம் முணுமுணுத்து கொண்டிருந்தாள், இதை கேட்டுக் கொண்டிருந்த ராம், நானும் தேடிக்கிட்டுதான் இருக்கேன் ம்ம்.. வேலை தான் கிடைக்க மாட்டேனுது.. என மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
அம்மா' நான் வெளியே போய்ட்டு வரேன் என கிளம்பியவனை மரகதம் தடுத்தாள், இருடா காலையில வெறும் வயத்துல வெளியே போகக்கூடாது ன்னு ஒரு டம்ளர் பால் கொடுத்தாள்.
ராம் நேராக தன் நண்பன் வினோத் வீட்டிற்கு சென்றான். வாடா உன்னதான் எதிர்பார்த்திட்டு இருக்கேன் என்றான் வினோத். என்னடா விஷயம் , நேத்து ஒரு ஐடியா தோனுச்சு அதான் ஒன்கிட்ட share பண்ணலாம்னு ' என்
மென்மையான
பெண்மையே
உறுதி கொண்ட
மனதினாய்
உள்ளம் பூக்கும்
அன்பினாய்
சேவை செய்யும்
மனிதமே
உன்னையன்றி
உலகம்
இயங்குமா ?
சிறிய
விதைக்குள்
மாமரம் போல
உனக்குள்
எத்தனை
உருமாற்றம்
பெருமை
கொள்கிறேன்
பெண்ணாக...
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்...
🌻🌻🌻🌻🌻
ஈர்மூன்றறிவென்று மார்தட்டும் மனிதகுலம்
பார் நியதியிதை! ஓரொருவர்க் கோர்குணமாம்
குணத்தால் வேறுபட்டும், கணப்பொழுதே ஆயிடினும்
மனச்சாட்சிப் படிநடத்தல் மனிதரெம் மாட்சியடா!
ஆறறிவு படைத்திருந்தும் மாறுகிற குணம்படைத்தோர்
கூறியஇவ் இலக்கணம்அம் மாறுநிற மனிதர்க்கில்லை
கள்ளம், கபடமொடு காழ்ப்பு நிறைமனத்தோர்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிடுவார்
நிசத்தை நினைப்பறிந்தும் நேரமொரு மொழிபுகல்வார்
பசுத்தோல் அணிந்தபுலி! பத்திரம், என் நண்ப!
அகம்காட்டா முகமுடையார், அறமென்றால் ‘என்ன?’வென்பார்
முகத்துதி செய்வதிலோ முடிசூடா மன்னரிவர்!
காரியமாகும்வரை நீஅவர்க்குக் கறியாவாய்!
காரியமான பின்னோ கறிவேப்பிலை ஆவாய்!
செப்பு