சிபி.வித்யாகரண் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சிபி.வித்யாகரண் |
இடம் | : பெருங்களத்தூர் - சென்னை |
பிறந்த தேதி | : 07-Jun-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 50 |
புள்ளி | : 2 |
என்னைப் பற்றி பெருமையாக சொல்ல ஒன்றும் இல்லை...!
உன் மௌனம்
களைந்த பேச்சு...
நீ கொட்டித் தீர்த்த
அடைமழை...
பாவை நீ
பூட்டி வைத்த
பார்வைகள் அனைத்தும்...
என் தாய் மண்ணின்
இருளைப் போக்கும்
மின்சாரமடி...
சுண்டு விரலால்
ஈர்க்கும் காந்தமடி...
சுருண்டு விழுவேன்
உனை பார்த்த நொடி...
என் கவிதைகளுக்கு
நீ சந்தமடி...
என் கற்பனைக்கு
மட்டும் சொந்தமடி....!
நீங்கள் இங்கே எழுதுவது....
1. பொழுது போக்கிற்கா ?
2. ஓர் இலக்கிய மரியாதை கௌரவம்
கிடைக்கும் என்பதற்காகவா ?
3. இலக்கியத்தில் பெரும் பெயர் புகழ்
பெற வேண்டும் என்ற பேரவாவினாலா ? (AMBITION )
4. நட்பு தோழமை கிடைக்கும் என்பதாலா ?
5. தனிமையை விரட்டி மன மகிழ்ச்சி தருகிறது
என்பதாலா ?
------கவின் சாரலன்
உன்னிடமே பிறந்து
உன்னாலே வளர்ந்து
உனக்காக தலைவணங்கி
நிழல் தந்து சுகம் தந்து
உன் மக்கள் உண்டு மகிழ
சுவைமிக்க கனி தந்து
காற்றாட இலை அசைத்து
குளிர் வாடை உனக்களித்து
குகை போல நான் இருந்து
குழந்தைகளைக் காக்கின்றேன்
நீ பெற்ற பிள்ளையம்மா
மாமரம் என்று பெயர்
என் கனிகள் கொடுப்பதற்கு
கல்லெறியும் தாங்கிடுவேன்
கண்ணீரும் வடித்திடுவேன்
இருந்தும் உன் பொறுமை
எனக்கு உண்டு உணர்ந்திடுவேன்
நிலமென்றும் பூமிஎன்றும்
பொறுமைக்கு உதாரணமாய்
நீ இருப்பாய் என் தாயே
..."" குறையுள்ள மனிதர்கள் ""...
பொன்னோடு பொருளும்
கொடுத்து உன்னோடு
அழைப்பதை விடுத்து
பெண்ணோடு எல்லாமும்
கேட்பதேன்.... உன்னோடிருந்த
மனிதம் மண்ணோடா,
அல்லது அதையும்
கடந்து வான் விண்ணோடா ...?
நீயே கேட்டுப்பார் உனை
மனிதன் தானா .... விலைபேசிடும்
அடிமை சந்தையில் உனையே
நீ விற்பதுமேனோ, மாடாய் நீ
பிறந்திருந்தாலும் மரியாதை ...
மனிதனாய் பிறந்தே பாவியானாய் ..
அன்னை சொல் கேட்டிரா நீ
சீரழிக்கும் சீரோடு பேர்போக்கும்
ஆடம்பர சுகங்கள் கிடைத்திட
அனுசரிக்கும் பிள்ளையானாய்
அவமானம் கொல்லவில்லையா,?
தன் உடல் விற்கும் தாசியும்
சிறந்தவளே.. உயிர்ப்பிணம்
உந்தன் முன்னால்.. பூமியிலே
தான் அவ்வளவு அழகாக இருக்கிறோம்-என்பது
மயிலுக்கு தெரியாது....
தான் எவ்வளவு கருப்பாக இருக்கிறோம்-என்பது
காக்கைக்கு தெரியாது...