பிரசன்ன ரணதீரன் புகழேந்தி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பிரசன்ன ரணதீரன் புகழேந்தி
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  29-Oct-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Feb-2017
பார்த்தவர்கள்:  565
புள்ளி:  36

என்னைப் பற்றி...

அன்பு செய்து கிடவே அன்றி யாமொன்றும் நினையேன்.....உதிரத்தின் ஒவ்வொரு அனுவும் தமிழ் பாட துடிக்கும்.

என் படைப்புகள்
பிரசன்ன ரணதீரன் புகழேந்தி செய்திகள்

பொதினி மலையடிவாரத்திலிருந்து தென் திசை நோக்கி நெடுவேள் ஆவியின் கட்டளையையும் மீறி கிளம்பியது அந்த பூங்காற்று. தென்றலாக வலுவெடுத்த அந்த பூங்காற்றின் கணத்தில் ஆயிரமாயிரம் பூக்களின் வாசம். குறிஞ்சி பூக்களின் வாசத்தையும் அள்ளி எடுக்க நினைத்தது ஆனால் அதற்கு இன்னும் பதினான்கு அயனம் காத்திருக்க வேண்டும் என்பதால் ஏமாற்றம் கொண்டு சென்றது. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் வளர்ந்திருந்த வானுயர விருட்சங்களை ஊடுருவியும் அது நிற்கவில்லை. மார்கழி பனியில் வெய்யோனும் குளிரின் கதகதப்பில் இருந்து மேற்கே செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கையில் அந்த பூங்காற்று மட்டும் எந்த வித சலனங்களுக்கும் ஆட்படாமல் பூம்பாறையி

மேலும்

கானல் பனி மெல்லிய அளவில் விழுந்த நேரமது. நடு சாமம் இரண்டு மணி இருக்கும் குளிரில் கடிகார முட்கள் கூட நடுங்கியது அப்போது தான் மதனின் அலைப்பேசி அலறியது. தூக்க கலக்கத்துடன் அலைபேசியை அனைத்தான் மீண்டும் ஒலித்தது இந்தமுறை எடுத்தான். எதிர் அலையில் ஓர் மென்மையான பெண் குரல்.

“மதன் ரெடியா இரு, 5 மணிக்கு நம்ம கிளம்புறோம் சரியா!

நமக்கு தேவையான பணம் எல்லாம் எடுத்துக்கிட்டேன்.” என தொடர்பு துண்டிக்கப்பட்டது.

உறக்கத்தை கலைத்து மணியை பார்த்தான் இரண்டு ஆறை தழுவி கொண்டிருந்தது. வேகமாக அலைபேசியை பார்த்தான் அப்போது தான் தெரிந்தது அது பிரம்மகலை என்று, மீண்டும் அவளுக்கு அழைத்தான்.

“ஏய் என்னடி சொல்ற அஞ்சு

மேலும்

அவள் ஏழு கண்டங்களும் காணாத சின்னஞ் சிறு அதிசயமா? இச்சைகளுக்கு அடங்காத சின்னஞ் சிறு விரகதாபமா? ஆழ்மனதில் லயிக்கும் சின்னஞ் சிறு புளங்காகிதமா? எண்ணங்களில் செல்லரித்துப் போன சஞ்சலமா? சிறுக சேமித்த சின்னஞ் சிறு இரகசியமா?

ஊடலுவகையில் கட்டி அணைத்தபடி சின்னஞ் சிறு ஆசைகளை கண்களில் மறைத்து கலவி கொள்ளும் வேளையில், தன்னவனின் வியர்வையில் திளைத்து சின்னஞ் சிறு இரகசியங்களை தனக்குள் புதைத்து புன்னகைக்கிறாள் கண்ணம்மா.

கூடல் பொழுதில் சல்லாபங்கள் கடந்து ஊடல் கொள்ளாமல் நித்திரையை அனைத்தபடி கிடக்கிறான் கவிநயன்.

அவனை தாழ்வாரத்தின் அருகே படுத்துறங்கும் சின்னஞ் சிறு நாய்க்குட்டியை போல வருடி ரசிக்கிறாள்.

அவன் மீத

மேலும்

அரூபமான அந்த அறையில் நடப்பவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விளங்கிற்று போலும். பார்த்தால் அப்படி தான் தெரிகிறது. வெளிரிய முகம் முறுக்கிட்ட மீசையின் மழுங்கள் என்று நலன் முகம் பல அமானுஷ்யங்களை கவ்வியிருந்தது. ஆனால் நலனுக்கு இப்போது எந்த பயமும் இல்லை மாறாக பயத்தை தாண்டி ஒரு குழப்பம் அவனுள் கர்ஜித்து கொண்டே இருந்தது பாவம் என் செய்வான் காலச்சக்கரத்தின் பிடியில் சிக்குண்டு தவிக்கிறான் தற்போது இந்த அறையில் சிக்கி முழி பிதுங்கி நிற்கிறான். நடப்பவை அனைத்திற்கும் தான் தான் விடை என்று ஒருவாறு கணித்து விட்டவன் அந்த விடையின் வினாவுக்காக மூளை நரம்புகள் புடைக்க யோசித்து கொண்டு இருக்கிறான்.

எதற்காக இங்கு வந்தோம

மேலும்

super 30-Apr-2020 7:45 pm

அதை பார்த்த அடுத்த கணமே ஒரு நீண்ட பெருமூச்சு விட்டபடி அந்த நான்கு மாதரசிகள் அவனை நோக்கி வந்தார்கள். அவனுக்கோ அவர்களை பார்த்த அதிர்ச்சியில், சுவாசகுழாயில் பேரடைப்பு மூச்சு தடைப்பட்டது ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்ற போதும் முடியவில்லை. ஒரு நிமிடம் அவன் ஆவி நாதியற்று பறக்க எத்தனித்தது. பதற்றத்தின் உச்ச நிலையின் போது அவனை சூழ்ந்து கொண்டார்கள் அந்த மாதரசிகள். நிறுத்தி நிதானமாகவே ஆரம்பித்தார் தென்மேற்கில் நின்ற பெண்மணி.

"என்ன ம்ம்.... என்ன !

உன் முழியே சரியில்லயே ஆன்ன்..."

"ஏய் இவன் கிட்ட என்னடி பேச்சு

டேய் என்னடா !

எங்கள பார்க்குற போன பார்க்குற
அப்புறம் சிரிக்கிற போட்டோ எடுக்குற அத

மேலும்

நன்றி சகோ... ரொம்ப அனுபவமோ... ஆண்வர்கத்த உயர்த்திப்பிடிப்பது இல்ல அனைவரும் சமம்... நம்மள வாழ விட்டாலே போதும்.... 24-Apr-2018 4:20 pm
தெய்வமே...... உங்களை போல ஒருத்தருக்காகத்தான் காத்திருந்தோம். இந்த கதையை படித்தபின்பாவது பொம்பளைங்க திருந்துவாங்களா.......? இல்ல திருந்தி நம்பள வாழவிடுவாங்களா...? நல்ல கதை; ஆண்வர்க்கத்தை உயர்த்திப்பிடித்த உங்களின் மாபெரும் சேவைக்கு என் மனம் மகிழ் நன்றி. 23-Mar-2018 12:06 pm

யாரும் பார்க்காத நேரமது சட்டென மணமகனை தள்ளிவிட்டு மணமகள் தலைதெறிக்க ஓடினாள். மண்டபவமே திடுக்கிட்டது. மணகோலத்தில் நடந்து வந்துகொண்டிருந்தவள் திடிரென ஓட்டமெடுக்க காரணமென்ன என அன்று நடந்ததை நினைத்து புலம்பியபடியே கண்ணாடி முன் நின்று யோசித்து கொண்டிருந்தாள் பர்வதம்.

அச்சமயம் "மா! மா! அம்மா" என வாசலில் நின்று கத்தி கொண்டிருந்தான் பலதேவா.

"டேய் என்னடா பிரச்சனை" என்று வினவியபடியே வந்தாள்.

"எதுக்கு மா கார்லாம் புக் பண்ணிருக்க ஆட்டோல போய்ட்டு வந்துருக்கலாம்ல"

"டேய் மானத்த வாங்காத டா வாடா" என்றாள் அவன் தாய் பர்வதம்.

நடுவே பலதேவன் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்துட்டு "டேய் இதுதான் கடைசி இது

மேலும்

மிக்க நன்றி தோழரே 27-May-2017 1:58 pm
கம்பன் கஞ்சனல்ல ! கம்பன் ஒரு காவியத் தலைவன் அழகு வண்ண ஓவியமும் அருமை 27-May-2017 4:36 am
காதல் நட்பு வாழ்க்கை மேலாண்மைக் கருத்துள்ள கதையா இல்லை காதல் இலக்கியமா? பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் 27-May-2017 4:34 am
பிரசன்ன ரணதீரன் புகழேந்தி - சிவா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-May-2017 6:57 pm

சில நேரங்களில் சில நேரங்களில்
சிலர் கேட்கும் விடைகள் தெரியாத கேள்விகளுக்கு நம் மவுனமே விடையாக காரணம் என்ன...

உங்களுக்கு இவ்வாறு ஏதேனும் அனுபவம் இருப்பின் பகிரவும் தோழமைகளே!

மேலும்

தெரியாததை தெரியாதுன்னு சொல்லாதெரிந்தவர்கள், தெரியும் சொல்ல முடியாது என்ற மமதையில் இருப்பதாய் காட்டிக்கொள்ளும் சமாளிப்பு. 21-May-2017 10:00 am
அனுபவம் இருக்கானா கேட்கிறீங்க..? நல்லா கேட்டீங்க சுவாமி..! திருமணம் முடித்தவர்கள் வாழ்க்கை எதுல ஓடுதுணு நினக்கிறீங்க... அம்மமணி சொல்லறது தப்பா இருந்தாலும் வாயைமூடி சிலநேரம் காதையும் மௌனம் ஆக்கணும்... இது என்அனுபவம்..! 21-May-2017 1:28 am
எல்லோருக்கும் இந்த அனுபவம் இருக்கும் . அறிவியல் இலக்கியம் தத்துவம் என்று எத்தனையோ விதமான கேள்விகள் . எல்லோருக்கும் எல்லா விடையும் தெரியுமா என்ன ? விடை தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் கூச்சமின்றி கேட்க வேண்டும் . மவுனமாயிருந்தால் கௌரவப் பிரச்சினை பார்க்கிறீர்கள் . அல்லது you are suffering from inferiority complex ! இதை உடைத்தெறிய வேண்டும். அறிவு தேடலில் மான அவமானப் பிரச்சினை இருக்கக் கூடாது. பிரணவத்திற்கு பொருள் தெரிந்து கொள்ள தந்தை மகனிடமே உபதேசம் பெற்ற கதையெல்லாம் நாம் அறிவோம் . நற் கேள்வி அன்புடன்,கவின் சாரலன் 20-May-2017 9:20 pm
கேள்வி நம் மனம் புண்படும்படி இருந்தால் பதில் சொல்லத் தேவை இல்லை. நம் பதிலால் பிறர் மனம் புண்படும் என்றாலும் பதில் சொல்லத் தேவை இல்லை. 20-May-2017 5:52 pm

வானத்தை தீண்ட கதிரவன் கதறிய நேரமது காலை பனி மெல்ல படர்ந்த அத்தருணத்தில் ஒரு உரத்த குரல் ‘ஜானு’ ‘ஜானு’ என்று. தூங்கி கொண்டிருந்தவளுக்கு உறக்கம் கலையவில்லை இன்னும் உரக்க ஜானு என்றழைக்க மார்கழி குளிர் மெய்ந்த தன்னுடலை அசைத்தாள் ஜானகி கண்ணை திறக்க மனம் மறுக்க உறக்கம் கலைத்தாள்.

“என்னங்க காலங்காத்தாலே உங்களுக்கு என்ன பிரச்சனை” என்று சொல்லி கொண்டே கடிகாரத்தை நோக்கினாள் ஜானகி ஆறு இரண்டை தழுவி கொண்டிருந்தது.

“ஒரு பிரச்சனையுமில்ல இன்னிக்கு எனக்கு ஆடிடிங் சீக்கிரம் ஆபிஸ் போனும் எனக்கு லஞ்சு வேனா ஒகேவா” என்றான் பார்த்திபன்

“இத நேத்தே சொல்லகூடாதா” என்று நொந்து கொண்டாள் ஜானகி.

“சொன்ன மட்டும் என

மேலும்

மிக்க நன்றி தோழி 05-Mar-2017 10:04 pm
கதை மிக அருமை!!! 04-Mar-2017 5:33 pm
மிக்க நன்றி தோழரே 19-Feb-2017 12:48 pm
நெஞ்சை தொடும் கதை! மாதரசிகளின் காதில் ஒலித்துக் கொண்டிருந்த அந்தக் கேள்வி, கதை படிப்போர் மனதிலும் நிற்கும் கேள்வி! நன்றாக கதை எழுதியிருக்கிறீர்கள்! நல்ல கதைகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்! 17-Feb-2017 10:31 pm
மேலும்...
கருத்துகள்

மேலே