அங்கயற்கண்ணி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அங்கயற்கண்ணி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 27-Apr-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 17-Sep-2011 |
பார்த்தவர்கள் | : 185 |
புள்ளி | : 5 |
வாழ்வின் உண்மைகளை கவிதைகளில் காண்கிறேன்...
நேற்று போல் நான்
இன்று இல்லை
மாற்றம் வந்த மர்மம் கூறும்
முகம் காட்டும் கண்ணாடி . . .
* * * * *
கீழ் உதடு சுழித்து நிற்கும்
மேல் இமையோ பட படக்கும்
கழுத்தில் ஓர் வியர்வைத் துளி
காவியமாய் எட்டிப் பார்க்கும். . .
* * * * *
கன்னம் இரண்டும் பள பளக்கும்
கை வருட இனி இனிக்கும்
உள் உதடு மலர் விரிக்கும்
ஊற்று ஒன்று பெருக்கெடுக்கும். . .
* * * * *
நல் இதயம் துடி துடிக்கும்
நாணம் தன் சிறகு விரிக்கும்
நாபியிலே உருண்டை வந்து
நர்த்தனமாய் நடனம் இடும் . . .
* * * * *
கோலம் போடும் மனக் கண்கள்
Sir I new to this website Pl say how to type in tamil
எவரையும் புண்படுத்தாத கவிதைகள் கேட்கிறது எழுத்து வலைத்தளம்....!!!
பேருந்து இருக்கையினிடையே என் தமக்கை நீசப்பேய்களால் சிதைக்கப்பட்டதையும்...
தோட்டாவினால் தொடப்பட்ட ஈழத்தோழன் இரத்தம் தெறித்துச் சிதறியதையும்....
முகமூடி கொள்ளையர்கள் மூன்றே சவரனுக்காக முதியவரின் குருதி பார்த்ததையும்...
சாதி இரயிலினருகில் இளவரசன் பாதி உடலாய்க் கிடந்ததையும்....
மதத்தின் இரதமேறி வந்து கர்ப்பிணித்தாயைக் கயவர்கள் குத்திக்கிழித்ததையும்...
இன்னும் எண்ணிலடங்கா இன்னல்களை நேற்றும் இன்றும் கண்டபின்னும்.,
எவரையும் புண்படுத்தாக் கவிதையொன்றை நான் எங்ஙனம் புனைவது...?
கயவரைக் கண்டிக்காத மலட்டுக்கவிதையில்
எதுகைகள்
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்துவிட்டு..
ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல...
மல்லிகைப்பூ தந்துவிட்டுமன்றாடுகிறாய்!
பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல...
மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!
அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்.
கத்திமுனையைவிட பேனா முனை வலிமையானது...
...
...
...
...
...
...
பழமொழியை நம்பி அதிகாரம் பகைக்கும் அகிம்சாவாதிகளே...!
அதிகாரவர்க்கம் துப்பாக்கியைக் கண்டு
ஆண்டுகள் பலவாயிற்று...
காத்தவராயன்-ஆரியமாலா,
லைலா-மஜ்னு,
அம்பிகாபதி-அமராவதி,
ரோமியோ-ஜுலியட்,
கிளியோபாட்ரா-ஆண்டனி
பாரிஸ்-ஹெலினா,
நெப்போலியன்-ஜோஸ்பின்,
...
...
...
...
...
சேராத காதலின் சிறப்பினை ஓதும் மாறாத மாந்தர்காள்..!
சோர்ந்தே கிடக்கும் ஆறாம் அறிவைச் சற்றேனும் எழுப்புங்கள்....
வாயிற்கதவைமட்டும் செய்துவிட்டு அதை வாழ்வில்லமெனச் சொல்லத்தகுமோ....?
பெயர்த்தெடுத்த கல்லுக்கெல்லாம் சிலையென்று பெயராகுமோ...?
தலையை மட்டும் தனியேகொண்டு உயிர் தழைத்திருக்கவியலுமோ...?
பிரியாதிருப்பதல்ல காதல்..பிரிதலை உணர்தல்தான் காதல்...!
இணைவதற்கான போராட்டம் மட்டுமல்ல காதல்.. இணைபிரியாது வாழ்வதுதான் காதல்...!
வெற்றுத்தாளை வெகுநேரம் வெறித்துப் பார்க்கிறேன்...
மடித்த தாளில் மை ஊறியும் கனத்த உள்ளத்தில் சொல் ஊறவில்லை...
கிழித்தெறிந்த காகிதங்கள் கிலோ கணக்கில் சூழ்ந்திருக்க கிழக்கைத் தொலைத்த வானமென நான் கவிதைதொலைத்து அலைகின்றேன்...
மனம் காய்ந்தே கிடப்பதால் விதைத்த க’விதை’ விளையாமல் போனதோ....?
’அக’விலைப்படி வழங்காததால் நடக்கும் கவிதைகளின் வேலைநிறுத்தமோ...?
பல கவிதைகளின் கரங்கள் காதல்சிறையின் கம்பிகளைத் தாண்டுவதே இல்லை....
அரைகுறைப் புலவரெல்லாம் கறையேறிய கூச்சல்களைக் கவிதைகள் என்றழைக்க...
மறையெனப் போற்றத்தகும் நிறைவான கவிதையொன்றை மனச்சிறையில் காணும் என் புரையோடிய கனவு நிறைவேறும் நாள் வருமோ...?