எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.



அனுபவம் ஒன்றே புரிய வைக்கும் வாழ்க்கை ஒரு வட்டமென 
காதலித்த பின் இடையில் கைவிட்டு பிரிகின்ற இருவரில் ஒருவர் வேறொருவருடன் இணைந்து வாழ்கின்ற காலத்தில் மீண்டும் பிரிவினை வருமானால் காதலித்தவரை நினைத்து வருந்துவதும் அவசரகதியில் எடுத்த முடிவை ஆழமாக சிந்திக்க வேண்டிய நிலையில் மறுபடியும் சந்திப்பது வாழ்வு ஒருவட்டமென உணர்ந்திட செய்தல்  !

விழி வழியே சந்தித்து மெளன மொழி மூலம் உரையாடி இதயத்தால் இணைந்த காதலர்கள் பிரிந்த பின் உருவாகும் இந்நிலை தவிர்க்க 
சிறு ஊடலால் எழுவதை மனம் விட்டு பேசி உடனடி தீர்வு கண்டால் பிரிவதும் மீண்டும் இணைய துடிப்பதும் இல்லாத நிலை உருவானால் புரிதல் வலுவாகி இன்பமான வாழ்க்கை உருவாகும்  !


பழனி குமார் 
02.07.2023

மேலும்


ஒற்றுமை வாழவைக்கும் !

=======================
தொடங்கிடும் வாழ்க்கை அடங்கிடும் ஒருநாள்இயற்கையின் நியதியை செயற்கை வெல்லாது மாற்றிட முடியாததை மாறுமென நினையாதீர் நிகழ்காலம் நடைமுறை எதிர்காலம் கற்பனையே சிந்திப்பதும் சாதிப்பதும் சிந்தையின் சாதனையே பொய்மை நிலைக்காது வாய்மை விருட்சமாகும் கனவுகள் பலிக்காது முயற்சிகள் வென்றிடும் மடமைக்கு தோல்வியே திறமைக்கு  வெற்றியே சுயநலம் குழிதோண்டும் பொதுநலம் உயர்த்தும் பிரிவினை அழித்துவிடும்ஒற்றுமை வாழவைக்கும் !
பழனி குமார் 10.06.2023

மேலும்


சொல்லும் செயலும் 
------------------------------

.பெண்ணினம் காத்திட 
மேடையில் முழக்கம் ,
விழா முடிந்ததும் 
விலைமகள் வீட்டு 
மஞ்சத்தில் தஞ்சம் !

உணவு விடுதியில் 
நாள் முழுதும் வேலை
அடுத்த வேளைக்கு 
அரிசி இல்லை 
அவன் வீட்டில் !

லவ்பேர்ட்ஸ் ஒருஜோடி 
வாங்கிச் சென்றான் 
வீட்டில் வளர்த்திட ,
கூண்டுகள் இரண்டில் 
தனித்தனியாக !  

பழனி குமார் 

மேலும்

  மனதின் எதிரொலி - 5 

--------------------------------------

சில நேரங்களில் நமது மனங்களில் நினைவுகள் பின்னோக்கி செல்லும். வாழ்க்கையில் முடிந்துவிட்ட நிகழ்வுகள், கடந்து வந்த நாட்கள் சிந்தையில் தோன்றி மறையும். அத்துடன் இணைந்து, மறைந்த பலரின் முகங்களும் அவர்கள் கூறிய வார்த்தைகள், உரையாடல்கள் சிலவற்றை ஞாபகப்படுத்தும். எனக்கு இது போன்ற அனுபவங்கள் அடிக்கடி ஏற்படுகிறது. அந்த நேரத்தில் நமது சிந்தனைகள் திசை மாறும். அவர்கள் கூறியது சில தவறாகத் தோன்றும். சில சரியாக நியாயமாக இருக்கும். ஆனால் அவற்றை நாம் ஏன் காலம் கடந்து நினைக்கிறோம் , அலசுகிறோம் என்று தெரியவில்லை. 


அவர்கள் கூறியதில் நல்லவற்றை நாம் ஏன் கேட்டும் அறிவுரையாக ஏற்று செயல்படவில்லை என்று இப்போது வருந்துவதும் எதற்காக என்றும் புரியவில்லை. அதன் விளைவுகளை நாம் இன்று சந்தித்து வேதனை அடைவதும் விசித்திரமான ஒன்று . இதனால் எந்தவித பயனும் இல்லை என்று அறிந்தும் இது நிகழ்வது இயற்கை நமக்கு அளிக்கும் தண்டனை என்று நினைக்கிறேன். இந்த வினாவும் விடையும் எனது மனதில் தொடர்ந்து எதிரொலிக்கிறது. 


பழனி குமார் 
 20.12.2021

மேலும்

  மனதின் எதிரொலி - 4 

---------------------------------------------------------------


கடந்த காலத்தில் மட்டுமல்ல , தற்போதுள்ள நவீன காலத்திலும் சாதி மதங்களைத் தவிர ஒரு பொதுவான பிரிவினை சமுதாயத்தில் எப்போதும் உண்டு . இந்த பிளவு இன்னும் நூறு ஆண்டுகள் கடந்தாலும் இது நிச்சயம் இருக்கும் என்றே நினைக்கிறேன் . அதாவது ஒரு பிரிவு " இருப்பவன் " மற்றொரு பிரிவு " இல்லாதவன் " , (அல்லது) " ஏழை " , " பணக்காரன் " என்பது தான் அது . உலகில் எங்கும் உள்ளது இந்த பாகுபாடு. இது நிலைத்திருப்பது ஏன் ..? மக்களின் வாழ்வாதாரம் எந்த அளவு பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றனர் என்பதைப் பொறுத்தே இந்த அளவுகோல் நிர்ணயிக்கப்படுகிறது. இது அனைவரும் அறிந்த ஒன்று . 

இதில் மட்டும் சாதி மதம் கிடையாது. ஏழ்மை எனும் கொடிய அரக்கனின் பிடியில் சிக்கி தவிக்கும் அடித்தட்டு மக்கள் நாளும் அன்றாட வாழ்விற்கு எந்த அளவுக்கு சிரமத்திற்கு ஆளாகி அவதிப்படுவது மிகவும் வேதனை அளிக்கிறது. இதிலிருந்து மிக மிக சிலரே தப்பித்து தங்களது நிலை மாற முடிகிறது. எல்லோரும் எப்போதும் அவர்களுக்கு உதவ முடியாது என்பது யதார்த்தம். அதிகம் வசதி படைத்தவர்களில் ஒரு சிலர் உதவ முன் வருகின்றனர். நடுத்தர மக்கள் பார்த்து நம்மால் உதவ முடியவில்லை என்று ஏங்கித் தவிப்பவர்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் கொடையுள்ளம் கொண்டவர்கள் தம்மால் இயன்றவரை உதவிகள் செய்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்பதை மறுக்கவில்லை. உடனடியாக இதற்கு எந்த அரசாங்கமும் தீர்வு காண முடியாது. அவர்கள் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்காமல் போகிறது. அதற்கு பல காரணங்கள் உண்டு. 
இதனால் சமூகத்தில் பல தவறுகள் நடக்கிறது. எப்போது தான் இந்த நிலை மாறும் ?


இந்த கேள்வி என் மனதில் நிரந்தரமாக எதிரொலிக்கிறது. அனைவருக்கும் கட்டளையல்ல, எனது தாழ்மையான வேண்டுகோள். அவரவர் தங்கள் நிலைக்கு ஏற்ப ஏழைகளுக்கு உதவுங்கள். 


பழனி குமார் 
    12.12.2021

மேலும்

  மனதின் எதிரொலி - 3 
----------------------------------------



பொதுவாக ஒருவருக்கு சில நேரங்களில் அவசியம் என்று நினைக்கும் போது , மற்றவருக்கு அறிவுரை கூறுவார்கள் , ஆலோசனை வழங்குவார்கள் . இது அவருக்கு கிடைத்த அனுபவத்தால் , ஆற்றலால் , பெற்ற அறிவால் , அதனை அடுத்தவருக்கு சொல்வது இயற்கை. அதிலும் சிலர் ஏற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் கூறுவது வழக்கமான ஒன்று, அது தவறில்லை . 


அதை ஏற்றுக் கொள்வதும், செவிமடுத்து கேட்டு அதன்படி தன்னைத் திருத்திக் கொள்வதோ , மாற்றிக் கொள்வதோ அவரவர் விருப்பம். நிச்சயம் ஒருநாள் அவர்கள் அந்த அறிவுரையை , ஆலோசனையை நினைத்துப் பார்க்கும்  காலம் வரும். அது காலத்தின் கட்டாயம் . 


இந்த செயல் ஆண்டாண்டு காலமாக நடந்தாலும் , ஒருசிலர் அடுத்தவர் தனக்கு அவ்வாறு அறிவுரை கூறினால் கோபம் வரும் . ஏற்க மறுப்பார்கள் .ஒருசிலர் தம்மை மாற்றியும் கொள்வார்கள் . நாம் யாரையும் கட்டுப்படுத்த முடியாது , கட்டாயப்படுத்த முடியாது . இதனால் தேவையற்ற பிரச்சினைகள் நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் . அதனால் விரோதம் உருவாகும் வாய்ப்பு உண்டு . 
மேலும் இது அவர்களின் தனிப்பட்ட முடிவு என்பதால் அவரே என்றாவது ஒருநாள் வருந்துவதோடு, கேட்காமல் விட்டது பெரிய தவறு என்று உணர்கின்ற வகையில் ஒரு நிகழ்வு நடக்கும் என்பது இயற்கை. இதை நாம் பல நேரங்களில் கண்டு இருக்கிறோம் . 


அப்படி ஏதாவது உங்களுக்கு ஆலோசனையோ அறிவுரையோ வழங்கினால் பொறுமையாக கேளுங்கள் . பிறகு நீங்கள் தனியாக உள்ளபோது ஆழ்ந்து சிந்த்தித்து ஒரு முடிவு எடுங்கள் . பொறுமை காத்தலும் , அமைதியாக இருத்தலும் மிக அவசியம் . அள்ளித் தெளித்த கோலம் போல நாம் எடுக்கும் அவசர முடிவுகள் தான் நம்மை தவறான முடிவுக்கு வழி வகுக்கும் .


எனது அனுபவம் காரணமாக இது என் மனதில் எதிரொலியாக ஒலித்துக் கொண்டிருக்கிறது . 


 பழனி குமார்  
     09.12.2021



மேலும்

உண்மைதான் ஐயா . ஒப்பிக்கொள்கிறேன் . நான் அனுபவத்தில் இதை உணர்ந்தவன் . இருப்பினும் நமது கடமை என்று எண்ணி இந்த தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பதிவிட்டேன். மிக்க நன்றி ஐயா 17-Dec-2021 8:50 am
பழனி குமார் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் சொன்னது உண்மைதான். அறிவுரை கூறுவரை அசிங்கப் படுத்தும் காலமிது. அறிவுரை கூறும் பல நூல்களை தெய்வீகப் புலவர்கள் அன்றே எழுதி வைத்தார்கள். காரணம் முப்பது வருடத் திற்கு ஒரு தலைமுறை மாறுகிறது அதுவும் அவரவர் வயதிற்கேற்ப பல தலைமுறை களாம்.தமிழ் பற்று அழிந்து போன இந்த காலத்தில் பகுத்தறிவுக்கு வேறு அர்த்தத்தை கொடுத்து திரிகிறார்கள். உண்மையான அறிவுரைகளை குழி தோண்டி புதைத்து விட்டார்கள்.. நல்ல எண்ணங்களை இன்று யார் எண்ணுகிறார்கள் ? யார் சொல்லுகிறார் ? யார் அதைப் படிக்கிறார்கள். இடிப்பாரை யில்லா ஏமரா மன்னன் கெடுப்பாரிலினும் கெடும் என்று வள்ளுவன் கல்லின் மேல் என்றுமிருக்க எழுதி வைத்துள்ளான். தமிழர் மதம் , மொழி இனம் கலாச்சார மனைத்தும் அழிந்து இரண்டு தலைமுறை கடந்து விட்டது. என்கடன் பனி செய்து கிடப்பதே ! நீங்கள் எழுதுவதை எழுதுங்கள் பயன் பெறுவோர் பயன் பெறட்டும். 14-Dec-2021 8:35 am

  மனதின் எதிரொலி - 2
*****************************


இன்று மாலை சற்று நடக்கலாம் என்று நினைத்து , அதாவது பகுதிநேர நடை பயிற்சி ( Part time walking ) சென்றேன் . ஆம் , அப்படித்தான் கூற வேண்டும் , தினசரி செல்ல முடியவில்லை . அவ்வப்போது உடல்நிலை கோளாறு . நான் திரும்பி வரும்போது ஒரு நண்பரை சந்தித்தேன் . அப்படித்தான் இப்போதெல்லாம் சிலரை சந்திக்க முடிகிறது . இதை கூறுவதற்கு காரணம், அவர் எங்கள் வீட்டிற்கு மிக அருகில் இருக்கிறார் . அவரிடம் என்னிடம் நலம் விசாரித்தார் . நான் அவரது குடும்பத்தாரைப் பற்றி விசாரித்தேன் . ஒவ்வொருவரைப் பற்றி மேலோட்டமாக கூறினார் . ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டேன் . அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அனைவரும் பிரிந்து சென்றுவிட்டனர் என்றார். கடந்த பத்து வருடங்களாக பேச்சு வார்த்தை இல்லை என்றார். சற்று அதிர்ச்சியாக இருந்தது.

அவர்கள் அனைவரும் ருகாலத்தில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவர்கள் . இது பெரும்பாலான குடும்பத்தில் நடைபெறுகிற ஒன்று தான் என்பதை மறுக்கவில்லை . எவ்வளவுதான் ஒற்றுமையாக இருந்தாலும் சொத்து , பணம் என்று வரும்போது குடும்பத்தில் விரிசல் என்பது இயற்கையான ஒன்றாகிவிட்டது . இதில் என்ன வேடிக்கை எனில் , தலைமுறைகள் மாறினாலும் பகையுணர்வு மறையவில்லை . ஒன்று சேராமல் உறவு முறைகள் பலருக்கு மறந்து விடுகிறது . குறிப்பாக வளரும் தலைமுறைக்கு யார் உறவு என்றும் தெரியாமல் போகிறது . தொடர்பு முற்றிலும் அறுந்து விடுகிறது . இது நடுத்தர வர்க்கத்தில் மட்டும் இல்லை . சமுதாயத்தில் பணக்காரர்கள் என்று கூறப்படும் பெரிய குடும்பங்களிலும் நிகழ்கிறது .

இனியேனும் இது போன்ற நிலை வராமல் இருக்க வேண்டும் என்பது என் மனதில் எதிரொலிக்கிறது . காலம் தான் மாற்ற வேண்டும் .

பழனி குமார்
 04 .12 . 2021 

மேலும்

   மனதின் எதிரொலி - 1

--------------------------------------

இதுவரை நான் எழுதி இருக்கின்ற அல்லது எழுதி வரும் கவிதைகள் ( Poetry ) ஆனாலும் சரி மற்றும் உரைநடை ( Text ) ஆனாலும் சரி கிட்டத்தட்ட 95% பொதுவான கருத்து அடிப்படையில் அல்லது சமுதாயத்தின் மீதுள்ள அக்கறையின் பேரில் குற்றங்கள் குறைகளை சுட்டிக்காட்டுவது , களைய வழி கூறுவதும், அதேபோல நடக்கும் நல்ல நிகழ்வுகளை பாராட்டுவதாக மட்டுமே அமைந்திருக்கும் . அதை மனதில் கொண்டு தான் முகநூலில் பதிவு செய்து வருகிறேன் . சில கருத்துக்கள் எனது தனிப்பட்ட அனுபவத்தின் வாயிலாக, "அனுபவத்தின் குரல்" என்ற தலைப்பிலும் , பலவற்றை வாழ்க்கையில் நடந்து முடிந்த பல நிகழ்வுகள் மூலம் " வாழ்க்கை பாடம் " எனும் தலைப்பிலும் எழுதியுள்ளேன் , எழுதியும் வருகிறேன் , இனியும் எழுதுவேன் எனது இறுதி மூச்சு உள்ளவரை . என் இதயத் துடிப்பு நிற்கும் வரை . இதனை ஒரு கொள்கையாக சபதமாக எடுத்துள்ளேன் . அது மட்டுமின்றி , இங்கு கவிஞர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர் . மேலும் உருவாகி வருகின்றனர். மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் .

அதிலும் பலரின் கவிதைகள் , அது மரபுக் கவிதைகள் ஆனாலும் புது கவிதைகள் ஆனாலும் மிக சிறப்பாக இருக்கிறது . நான் அவர்கள் வரிசையில் நிற்பதற்கு எனக்கு தகுதி இல்லை இல்லாதவன் என்பதை நன்கு உணர்ந்தவன் . எனது உயரம் எனக்கு தெரியும். இன்றுவரை சுமார் 3250 கவிதைகள் எழுதி இருக்கிறேன் .அதில் பலவற்றை தவற விட்டுவிட்டேன் . ஆகவே அனைவருக்கும் புரியும் வகையில் உரைநடை வடிவில் தொடர்ந்து எழுதலாம் என்று நினைக்கிறேன் . 

வாழ்க்கை பாடம் மற்றும் அனுபவத்தின் குரல் , இரண்டும் தலா 100 பகுதிகள் எழுதி இருக்கிறேன் . இடையிடையே அவ்வப்போது சில கவிதைகள் இடைச்செருகலாக வரும் . என்ன செய்வது அனைத்தையும் நீங்கள் படிக்க வேண்டும் என்பது காலத்தின் கோலமா அல்லது காலத்தின் கட்டளையா என்று தெரியவில்லை . உங்கள் ஆதரவிற்கும் அன்பிற்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள் ! 

மேலும் எனது பதிவுகள் மூலம் நான் எந்த ஒரு தனிப்பட்ட நபரைப் பற்றியோ , குறை கூறுவதற்கோ அல்லது தாக்கியோ எழுதவில்லை . என் அனைத்து எழுத்துக்களும் பொதுவான ஒன்று. மற்றவர்களை விமர்சனம் செய்ய வேண்டும் என்ற தவறான நோக்கமும் இல்லை. இதை பற்றி தங்களது மேலான கருத்துக்களை யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் . நான் சமுதாயம் எனும் பெருங்கடலின் ஒரு துளியே . 


பழனி குமார் 
 04.12.2021

மேலும்



வாழ்க்கை எனும் பயணத்தில் 

வருவதும் போறதும் காட்சிகள் !
நிகழ்வது நிலையானது இல்லை 
நினைவில் நிலைப்பது இல்லை !

வழி தவறிய பாதையில் பயணமில்லை 
வழி மாறும் நோக்கம் என்றுமில்லை !
புரிந்தவர் என்னை வாழ்த்திடுவர் 
அறிந்தவர் என்னை ஆரத்தழுவவர் !




பழனி குமார்   

மேலும்

மகிழ்ச்சி பாராட்டுக்கள் அன்புடன், கவின் 22-Nov-2021 3:21 pm
மிக சரி ஐயா . மன்னிக்கவும். தவறுதலாக பதிவு செய்துள்ளேன் . வழி தவறியா ...என்று தான் சரி. மாற்றி விடுகிறேன் . என்னை அறியாமல் நடந்தது . உங்கள் கருத்திற்கு நன்றி ஐயா 22-Nov-2021 2:36 pm
அறிவுரைக் விரக்த்திக் கவிதை அருமை வழி தவறா பாதையில் பயணமில்லை ----பொருள் நெருடுகிறதே தவறும் என்றுதானே இருக்க வேண்டும் ? பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை நல்ல பண்பு தவறிய பிள்ளையை அன்னை பேர் சொல்லி வாழ்வதில்லை ----புலமைப் பித்தனினின் அற்புத பாடல் வரிகள் பாதை தவறி கால்கள் பயணிக்குமாயின் விரும்பிச் சேரவேண்டிய ஊர் நோக்கிப் பயணிப்பதில்லை . வழி தவறா பாதையில் பயணமில்லை -----வழி தவறிய பாதையில் பயண மில்லை ---எது சரி தங்கள் விளக்கமென்னவோ கவிப்பிரிய பழனிகுமார் ? வழி மாறும் நோக்கம் என்றுமில்லை ! புரிந்தவர் என்னை வாழ்த்திடுவர் அறிந்தவர் என்னை ஆரத்தழுவவர் ! ----ஏதோ சிலருக்கான சுய விளக்கப் பதில் போல் தெரிகிறது எங்கே வாழக்கை தொடங்கு அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் வாழ்க்கை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது -----கண்ணதாசனின் வரிகள் OUR REVELS WERE NOW ENDED THESE OUR ACTORS WILL MELT INTO THIN AIR ----என்று எழுதுவார் VISION கவிதையில் ----உங்கள் வரிகள் இப்பெரும் கவிஞர்களின் கவிதை வரிகளை நினைவு படுத்தியது விரக்தி அல்லது நிலையாமை இறப்பு போன்ற கவிதைகளில் இறுதி வரிகளில் POSITIVE சிந்தனை உள்ள கவிஞனின் வரிகள் இருப்பின் தனி மனிதனுக்கு மனோவியல் ரீதியாக உதவும் ---எடுத்துக்காட்டாக கண்ணதாசனின் மனிதன் என்பவன் தெய்வமாகலாம் , மயக்கமா கலக்கமா என்ற பாடல் வரிகள். கேட்டிருக்கலாம் . வாழ்த்துக்கள் 22-Nov-2021 11:00 am

  இனிய தீபாவளி வாழ்த்துகள் 

மேலும்

மேலும்...

மேலே