எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்த வார ஆனந்த விகடனில் (கோவை பதிப்பு) எனது "விலகி நெருங்கும் பூனை" கவிதை வெளிவந்துள்ளதை 

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஆசிரியர் குழுவுக்கும், கவிதைத் தேர்வுக்குழுவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.


விலகி நெருங்கும் பூனை!
*************************************

வீட்டின் அருகேயுள்ள சிறு பூங்காவில்

மாலை நேர நடைப்பயிற்சி என் நெடுநாள் வழக்கம்.

அதைச் சுற்றிலுமுள்ள வேப்ப மர நிழலில்

யாரோ வைத்துவிட்டுச் சென்றிருந்த பிடி சோற்றுக்காக

ஆவலுடன் வந்த நிறைமாதக் கர்ப்பிணிப் பூனையொன்று

என் குறுக்கீட்டால் மருண்டு ஓடிவிட்டது.

சற்றுநேரம் மறைந்து பொறுத்திருந்து பார்த்தும்

அது திரும்பவே இல்லை.

இரவில் ’இன்னும் ஒரே ஒரு கை’ என

மனைவி என் தட்டில் உணவு வைத்தபோது

பூனை என்னை நெருங்குவது போலிருந்தது!


நன்றி : ஆனந்த விகடன்.

மேலும்

நன்றி தோழமையே... 10-Jan-2016 6:07 pm
நன்றி தோழர்.. மகிழ்ச்சி... 10-Jan-2016 6:07 pm
நன்றி தோழர்... 10-Jan-2016 6:06 pm
வாழ்த்துக்கள் தோழரே ! கவி மிக சிறப்புடன் ! 10-Jan-2016 7:10 am

திருவெறும்பூர் திவாகர்
முசிறி கணேசன்
மணச்சநல்லூர் ஜெயந்தி
காட்டூர் குமார்
துறையூர் சீனிவாசன்
தொட்டியம் ரேவதி
லால்குடி முத்து
மணப்பாறை தமிழரசி


இவர்கள் விரும்பி
கேட்கும் இந்த பாடல்
என்ற அறிவிப்பிற்கு பின் வரும்
அகில இந்திய வானொலியின்
பாடல் தந்த இனிமை
இன்று பண்பலை தரும்
பாடல்கள் தருவதில்லை.


* பண்பலை - FM

மேலும்

மிக்க நன்றிகள் நண்பரே... இதை கவிதைப் பக்கத்தில் பதிவதற்கு சிறிது ஐயம் இருந்தது, அதனால்தான் பதியவில்லை. 30-Jun-2015 2:20 pm
உண்மைதான் ஐயா.. இன்றைய பண்பலை துரித உணவுகள் போல அன்றைய அ.இ.வா வீட்டு உணவு போல.. தங்கள் வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன். 30-Jun-2015 2:18 pm
ஹாஹா.. தாங்கள் விருப்பபட்டால் உடனே சேர்த்துவிடலாம் நண்பரே. //அளவுக்கு அதிகமாக கிடைப்பதால் இன்பமும் இனிமையும் குறைந்துவிட்டது // உண்மைதான் நண்பரே.. கருத்திலும் வரவிலும் மகிழ்ந்தேன் நண்பரே.. 30-Jun-2015 2:15 pm
இதில் திருச்சி புதிய கோடங்கி பெயா் விடுபட்டுள்ளது நண்பரே அளவுக்கு அதிகமாக கிடைப்பதால் இன்பமும் இனிமையும் குறைந்துவிட்டது அருமை நல் நினைவு 30-Jun-2015 9:47 am

நவநாகரீக தமிழ்ப்பெண்
நவநாகரீக உடையில்
இடுப்பில் குழந்தை
காவிக்கண்டை ஊட்டும் அழகில்
மகிழ்ச்சி கொண்டேன்
“Finish it fully” என்றார்
வேதனை கொண்டேன்

மேலும்

அரக்க பரக்க அன்றும் கணினியுடன்
போரில் இருந்தேன். பின்னாலிருந்து
என் தோளில் கைகள், எவன் அவன்
என மனதுக்குள் வார்த்தைகளை தேடும்
அந்த நொடியில் திடுக்கிட்டுத் திரும்பிப்பார்த்தேன்.
வழக்கம்போல் எனக்கான பிரச்சினையுடன்
நின்றிருந்தார் மேலாளர். அப்பாடா என
மனதுக்குள் பெருமூச்சு விட்டபடி, சார் என்றேன்.

இதக் கொஞ்சம் முடிச்சுக் குடுத்துருப்பா
என சாவகாசமாய்ச் சொன்னார்.
காலக்கெடு நெருங்கும் அவ்விருத்
திட்டங்களிலும் பணிச்சுமை கழுத்தை
நெரிக்கும் வேளையில் இது கொஞ்சம்
சிரமம் என நாசூக்காய் சொல்ல எத்தனிக்கையில்
அவசரமில்லை, எனக்குத் தெரியும் உன்னால் முடியும்
எனவும், சில பல ஆங்கில மேற்கோ (...)

மேலும்

உங்களுக்குமா...!! மிக்க சந்தோசம் தோழி..!! கருத்திர்க்குவ்மிக்க நன்றிகள்..!! 20-May-2015 3:33 pm
ஹாஹா... கருத்திற்கு மிக்க நன்றி தோழமையே..!! மறதி மறக்கமுடியாத பல அனுபங்களைத் தந்திருக்கிறது.. நேரம் கிடைக்கையில் பகிர்கிறேன்..!! 20-May-2015 3:31 pm
அருமை எல்லா இடங்களிலும் நடக்கிறது 20-May-2015 12:30 pm
ஹஹா.. அடிக்கடி மறந்துடுங்க.. இனிய கவிதை எங்களுக்கும் கிடைக்கும்.. 20-May-2015 11:40 am

இரு நண்பர்கள் வெகு நாட்கள்
கழித்து சந்தித்துக் கொண்டனர்.
ஒருவர் ஐபோனில்
பேசிக்கொண்டிருந்தார்,
இன்னொருவர் சாம்சங்கில்
பேசிக்கொண்டிருந்தார்.
இறுதியில் செல்பி எடுத்து
தங்கள் நட்பை உலகுக்கு பறைசாற்றினர்.

மேலும்

தங்கள் வரவிற்கு கருத்திற்கும் மிக்க நன்றிகள் தோழர் சரவணா அவர்களே.. 15-May-2015 3:14 pm
ஆம் தோழி... இன்றைய அவசர உலகத்தில் மனிதர்களுக்கு மதிப்பு தர மறந்துவிட்டார்கள் மனிதர்கள்...!! 15-May-2015 3:12 pm
காபி டே லோகோக்களும் பின்னாலிருந்தன................ புதிய தளங்களில் சிறகடிக்கிறது கவிதை... 15-May-2015 3:02 pm
நிகழ்கால நட்பு :) அருமை தர்மன்.. 15-May-2015 12:19 pm

அன்று சிறு வயதில்
பட்டாம்பூச்சி பிடிச்சு திரிகையில்,
விமானம் பறப்பதைக் கண்டு
அதிசயித்து ஓடிய நான்,
அவசர அவசரமாய் விமானம் பிடித்து
ஊர் வந்து இறங்கி பட்டாம்பூச்சி பறப்பதைக்கண்டு
அதிசயித்து நின்றேன் இன்று...

மேலும்

நன்றி தோழி... 11-May-2015 11:23 am
மிக அருமை தோழரே 11-May-2015 10:53 am

தன் கதாநாயகன் திரைப்படம் குறிப்பிட்ட தேதியில்
வெளியாகவில்லை என்று போராடுகிறான்,
தன் இனம் அழிக்கப்பட்டபோது தொலைக்காட்சியில்
மானாட மயிலாட பார்த்துக்கொண்டிருந்த
உணர்ச்சிமிக்க தமிழன்..!!!

மேலும்

நன்றி தோழி...!!! 11-May-2015 2:37 pm
நல்லாருக்கு தோழரே ! 11-May-2015 2:35 pm

என்ன ஒரு முரண்
நீ செல்லமாக கொஞ்சினாலும் காதல் கொள்கிறேன்
கோபமாக முறைத்தாலும் காதல் கொள்கிறேன்...!!

மேலும்

நன்றி ஐயா.. என் கிருக்கலைத் தொடர்ந்த உங்கள் கவிதை அழகு..!! 12-May-2015 12:21 pm
மெளனமாக நின்றாலும் காதல் கொள்கிறேன் மாலை வராமல் ஏமாற்றினாலும் காதல் கொள்கிறேன் முரணின் காரணம் அறியேன் சகியே ! ‍‍....காதல் கவிதையின் நீளத்திற்கு எல்லை இல்லை அதனால்தான் காவியங்கள் பிறந்தன. வாழ்த்துக்கள் தர்மன் அன்புடன், கவின் சாரலன் 12-May-2015 10:42 am

மேலே