படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)

இந்த பதிவு நீங்கள் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு.

பரவலாகவே இந்தியர்கள் வெள்ளைத்தோலுக்கு மயங்கும் குணம் கொண்டவர்கள் என்ற எண்ணம் உள்ளது. உதாரணத்திற்கு மேட்ரிமோனியல் இணைய தளங்களை எடுத்துக் கொள்ளுங்கள். வெண்மையான (ஃபேர் லுக்) மற்றும் நல்ல தோற்றம் கொண்ட மணமகன் அல்லது மணமகள் தேவை என்ற வரிகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அழகான மணமகளாக தோற்றமளிப்பதற்கும், எடுப்பான மணமகனாக தோற்றமளிப்பதற்கும் வெள்ளைத் தோல் மிகவும் முக்கியம் என்பது தான், இதில் வெற்றியை நிர்ணயிக்கும் காரணியாக உள்ளது. பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சிக் காலத்தில் தான் வெள்ளைத் தோல் மோகம் உருவாகத் துவங்கியது. வெள்ளைத் தோலுடைய பிரிட்டிஷ்காரர்கள் நம்மீது ஆளுமை செலுத்தி வந்ததால், நமக்கும் வெள்ளைத் தோல் மீதான மோகம் வரத் துவங்கியது எனலாம். இவ்வாறு வெள்ளைத் தோலின் மீது இந்தியர்கள் மோகம் கொண்டிருப்பது ஏன் என்பதற்கு சில காரணங்களை பட்டியலிட முடியும். இந்த காரணங்களை ஒன்றாக்கி, உங்களுக்கு தமிழ் போல்ட் ஸ்கை வழங்குகிறது.


Close (X)

வழி : vinayaka கருத்துகள் : 0 பார்வை : 1890
0

நந்தலாலா - குமரி வீசிய வலையில் வீழ்ந்து விட்டாயே நந்தலாலா...! விலைபேச முடியா நட்பை விட்டாயோ நந்தலாலா...! அகம் காணாமல் பறந்து வந்தாய் நந்தலாலா..! முகம் காணும் நேரம் மறந்து சென்றாயோ நந்தலாலா..! தேளாய் கொட்டிய தேவன் நன்றா நந்தலாலா..! தோளை கொடுத்த தோழமை கொன்றா நந்தலாலா..! ஒட்டிய நட்பில் வெட்டியது ஏனோ நந்தலாலா..! வெட்டியதும் குரல் ஒட்டி முட்டியதேன் நந்தலாலா..! வேகம் கண்டுதான் மோகம் கொண்டேன் நந்தலாலா..! நகம் போலென்னை வெட்டி விட்டாயோ நந்தலாலா..! விரலுக்கா? நகதுக்கா? விடுதலை யாருக்கு நந்தலாலா..! பகைமைக்கா? நட்புக்கா? பதில் சொல்வாயோ நந்தலாலா..! விடையறிய தவிக்கின்றேனுன் விடுகதையால் நான் நந்தலாலா..! விடை கொடுத்து வழியனுப்பு என்னை நந்தலாலா..! ---நட்போடு குமரி. உண்மை நட்பு


வழி : நாகூர் கவி கருத்துகள் : 0 பார்வை : 1837
1

கோடை வெயில் வெளியே செல்ல முடியாமல் தடை விதிக்கிறது. அனல் காற்று வீசுவதால் வீடுகளிலும் இருக்க முடியவில்லை. இரவு தூக்கமும் வர மறுக்கிறது. இத்தனை சோதனைகளையும் நாம் தாங்கித்தானே ஆக வேண்டும். இந்த கோடையை சமாளிக்க ஏராளமான பழங்கள் தற்போது மார்க்கெட்டை ஆக்கிரமித்துள்ளன. சில பழங்களை அப்படியே உண்ணாமல் சாறு எடுத்து குடித்தால் பலன்கள் கூடுதலாக உள்ளது. பழச்சாறு குடித்தால் சிறுநீர் வெளியேறும்போது பல்வேறு நோய்களின் தாக்கம் வெளியேறி விடும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் வெயில் காலத்தில் ஏற்படும் காய்ச்சல் குணமாகும். மேலும் இப்பழச்சாறுடன் சமஅளவு மோர் கலந்து குடித்தால் காமாலை கூட குணமாக வாய்ப்புள்ளது.


வழி : vinayaka கருத்துகள் : 0 பார்வை : 1835
4

போட்டியுலகில் உனக்கென்று ஒரு அடையாளம் அங்கீகாரம் கிடைக்காவிட்டால் உன் நிலைமை என்னாகும்...... விளம்பர வெளிச்சம் உன்மேல் படுவதற்காய் எத்தனை உயிர்களை இருட்டில் தள்ளியிருப்பாய்....... கவிதைக்கு விளம்பரம் குறைகாணா விமர்சனம்.. நகைக்கு விளம்பரம் தேவதையின் மேனி.... வியாபாரம் செழிக்க அத்தனையும் கவர்ச்சியாய்.. யாவரையும் சென்றடைய வேண்டுமே விளம்பரம்.... உண்ணும் உணவு முதல் உயிர்கொல்லும் கிருமிநாசினி வரை அத்தியாவசிய யுக்தியாய்.... செல்வத்தில் மிதப்பவனுக்கு செல்வாக்கு கைகொடுக்கும் ஆனால் ஏழையின் நிலையை உலகறிய வழியென்ன......... பணமும் புகழும் தேடி முன்னது துரிதமாய்... பலரை அடையவேண்டுமெனும் ஆதங்கத்துடன் பின்னது ...!!! ===================== தோழி துர்க்கா


வழி : தோழி துர்க்கா கருத்துகள் : 0 பார்வை : 1863
4

உங்களுக்கு மிகவும் பிடித்த வலைப் பதிவுகளை பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள் "படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)"



புதிதாக இணைந்தவர்

மேலே