ஜோதி- கருத்துகள்

அழகும் ஆடம்பரமும் உருவத்தில் காணவில்லை...
மனம் போல் அழகும்
குணம் போல் ஆடம்பரமும்
தங்களை போல் யாருக்கும்
வாய்ப்பதில்லை ......

கவிதை அருவி 'நி'-ல் நிரம்பி வழிகிறது.....!
அருமையான பதிவு....!

காய்ச்சல் குணமாகி விரைவில் நலமுடன்
வர வேண்டிக்கொள்கிறேன்...

காய்ச்சல் வந்தாலும் அணை போடாமல்
கவி அருவி தொடர்ந்து வர
கவிதை காதலனே உன்
கவி வரிகளில் மனம்
கலங்கி தான் போனேன்....!

உங்கள் ,வரவேற்பு மிக அருமை!
(தமிழன்பி).....இதுவரை எனக்கு
யாரும் கொடுத்திராத அடைமொழி...
தமிழ் மொழியின் மேல் நான் கொண்ட
தீராத பற்றை தாங்களும் அறிந்து விட்டீர்கள் போலும்....மிக்க நன்றி..

சரி விசயத்திற்கு வருகிறேன்....
எழுத்து.காம் தளத்தை நான் பலமுறை பார்வை இட்டுள்ளேன்..
நிறைய கவிதைகள் படித்துள்ளேன்..
சில வாரங்களுக்கு முன்பு தான் நானும்
இந்த தளத்தில் இணைந்துள்ளேன்..
எனக்கும் இந்த புள்ளி இடுவதில் ஒரு
புரியாத புதிராகவே இருந்தது....
எவ்வாறு புள்ளிகள் பெறுகிறார்கள் என்று தெரியாமலே இருந்தது....
இன்று அந்த புதிரையும் உங்கள் எழுத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்......

நானும் சக நண்பர்களிடம்
என்னோட கவிதைக்கு புள்ளிகள் கொடுக்க சொல்லியிருக்கிறேன்.
சில பேர் சரின்னு சொல்வாங்க....போடுவாங்களா என்னனு தெரியாது.
ஆனாலும் புள்ளிகள் பெற்றிருக்கிறேன்.அதில் சிறிது
மகிழ்ச்சியும் உண்டு....ஒரு நண்பரிடம் புள்ளிகள் இட சொன்ன போது அவர் சொன்ன ஒரு வார்த்தை தான்
என்னை ஒரு நிமிடம் திகைக்க செய்தது...அன்றிலிருந்து
நான் யாரிடமும் புள்ளிகள் கொடுக்க சொல்வதில்லை ..

அந்த நண்பர் சொன்னார் உங்கள் கவிதை மேல் உங்களுக்கு நம்பிக்கை இருக்கான்னு கேட்டாங்க....
ஏன் நண்பா இப்படி கேட்கிறீங்கன்னு கேட்டேன். உங்கள் கவிதை மேல உங்களுக்கு நம்பிக்கை இருந்தா
நீங்கள் யாரிடமும் கேட்கவேண்டாம்..அதற்குரிய மதிப்பு
உங்களுக்கு தானாக கிடைக்கும்ன்னு சொன்னாங்க.அதிலிருந்து பதிவு செய்வது மட்டுமே என் வேலை....

உங்கள் பதிவில் எனக்கும் கருத்து இட வாய்ப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி நண்பா.....

//ஓர் பூவோடு மற்றொருபூ பகிர்ந்துகொள்ள
காற்றின் பங்களிப்பை போல்

கரையோடு கடல் பகிர்ந்துகொள்ள
அலைகளின் பங்களிப்பை போல்

மேகமது மண்ணோடு பகிர்ந்துகொள்ள
மழையின் பங்களிப்பை போல்

மலையுச்சி தரையோடு பகிர்ந்துகொள்ள
அருவியின் பங்களிப்பை போல்

இந்த அற்பஜீவன் பகிர்ந்துகொள்வதற்க்கு
மிகமுக்கியமான பங்களிப்பு
நின்"முத்தம்"//....முத்தத்தின் பங்களிப்பினை அழகான கவிதை வரிகளில் ஒப்புமை செய்தது அழகு!!!!!

மிக அருமை நண்பா!!!! என் மனதில் தோன்றியதை வெளிப்படுத்தி விட்டீர்கள்......பாராட்டுக்கள்

கவிதை நன்று....நின் நினைவுகளின் நிழல்கள்....தொடர்கதையானதோ....

//இனியவளே !
உனக்கு வரன் ஆகும் அரும் வாய்ப்பு
கிட்டாவிட்டாலும் உன் இதயத்திற்கு
அரண் ஆகும் பெரும் பாக்கியம் போதும் . எப்போது என் அன்பின் ,
என் ஆசையின் அரவணைப்பு போதாது
என தோன்றுகிறதோ, அன்றே சொல்
உன் இதயத்தை உன்னிடமே ஒப்படைத்து
உள்ளம் நிறைந்த உன் நினைவுகளோடு ,
உயிர் பிரிந்து செல்கிறேன்
உன் இதயம் பிரியும் துயர் தாளாது ...... //
அன்பின் ஆழம் உணர்வுகளால் வரிகளில் காண்கிறேன்...
அருமை அருமை....

//இறைவனுக்குத்தான் என் மீது எத்தனை அக்கறை !
வாழும்பொழுதே , வாழ்நெறியை போதிக்க எனக்கான
சொர்க்கமும்,நரகமுமாய் நின்னை அருளியிருக்கின்றான் ... //.......ம்ம்ம்மம்மம்ம்ம்ம் அழகு வரிகள்.....

கவிதை நன்று.....கண் - மின்சாரம் வர்ணனை அழகு...

//உன் குயில் பாட்டுதனை நாளும் நான் கேட்டு , சுகமாக வாழும் நாள் தொலைவில் இல்லை ,
அதுவரை அன்பே காத்திரு .......
நம் வாழ்வின் விடியலுக்காக .....//
....விடியல் வரும் காலம் தொலைவில் இல்லை....அருமையான படைப்பு நண்பா.....வாழ்த்துக்கள்...


ஜோதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே