அன்புள்ள அக்ரம் ஷா- கருத்துகள்

நெருப்பு அதிகமானால் பனிகட்டி ஆவியாகி விடும்... தோழியே... நல்ல கற்பனை...

நாவினிலே அதுவும் வேண்டும்
நன்மை பயக்கும் சொற்களாய் வேண்டும்...
பெண்மை எப்படி வேண்டும்?
அவளுள் ஆனாய் வேண்டும்..
_
-சிறப்பு!!

நீ உரைத்த உரையதனில்
வாசத்தில் வகைபெருக்கும் மலர்கள் நடுவில்என்
ஸ்வாசத்தை கண்டுவந்து எந்துயர் துடைத்தாய்!!

அருமை ...

Nanbargalay yen seyaluku varunthuguren, ,!
Ine oru pothum ithu pol thavaru nadakathu. . . . Mannikavum, iraivanukaga yennai mannikavum.

நாகரிகாதின் உச்சம்
வெறுமையாகிறது
மனங்கள் ...!!!(பொங்கல் கவிதைப் போட்டி)

தெரிந்தவரை கண்டால் தலையாட்டி நின்று கதைத்து கைகுலுக்கிவிட்டு போகும்
காலம் மாறி உறவினரை கூட தொலைபேசியில் உபசரித்து விட்டு ஒதுங்கும் காலம் ஒப்பந்தமாகிவிட்டது
சித்தப்பா மாமா பெரியம்மா
என்று சொல்லி சொல்லி வளர்த்த தலைமுறை
அதை சொல்வதற்கும் பண்பு உணர்ந்து நடப்பதற்கும்
பிரியம் இல்லாமல் பிரிந்து கிடக்கிறது திருமணங்கள் பூப்புனித நீராட்டு விழாக்களுக்கு
நாலு நாளுக்கு முன்பே
வீடு நிறையும் உறவுகள்
மொய் எழுதுவதற்கும் போட்டோ எடுப்பதற்கும் உரிய நேரத்தில் வந்துவிட்டு ஒதுங்கி விடுகிறது உறவுகளை கணணியுகம் பிரிக்கவில்லை
உறவுகளே அந்த சிறகுகளை முறித்துவிட்டு வீட்டு மூளைக்குள் அழுது கொண்டு தான் கிடக்கிறது.

ஐயோ என்றாள் ஓடிவரும் உறவுகள் செத்தவீடு நடந்தாலும்
கடைசி நேரத்திற்கு வந்து
முகம்காட்டி விட்டு ஓடிவிடுகிறது....

இந்த அவசர வாழ்வில் இப்படியிருந்து எதை சாதித்து விட்டீர்கள் நேரமில்லை என்ற ஒற்றை சொல்லை வைத்து
இனியும் ஒப்பாரி பாடாதிர்கள்
அது உங்களுக்கு நிறைவாக இருக்கலாம்.
ஆனால் உங்கள் குழந்தைகள் நாளை திக்கு தெரியாத சமூக காட்டில் அனாதையாக அலைவார்கள் ஆதலால்
நம் முன்னோர்கள் சேர்த்து வளர்த்த கூட்டு உறவு வாழ்க்கையை ஒற்றை ஆக்காது
மனம் இறங்கி வந்து
அன்பை பொழியுங்கள்
இல்லையேல் மாதத்தில் ஒரு தற்கொலை நடப்பதற்கு
எல்லோரிடமும் மனநோய் எதிரி உயிர் எடுக்க காத்திருப்பான்.....!!!

தமிழ் தேசம்(பொங்கல் கவிதைப் போட்டி)

பாட்டன் பூட்டன் காலத்துல‌
பண்போடு இருந்த‌ நேரத்துல‌
பொழப்பு தேடி வந்தாங்க‌
அண்டிப் பிழைக்க‌ வந்தவங்க‌
அடிமையாக்கி விட்டாங்க‌.....
படை எடுத்து வந்தவங்க‌
வித்துப் பொழைக்க‌ வந்தவங்க‌
கொட்டிக் கிடக்கும் செல்வம் கண்டு
கொள்ளை அடிச்சுப் போனாங்க‌
நாட்டை பிடிச்ச‌ அன்னியன் தான்
நம்மை ஆட்டிப் படைக்க‌ பாத்தாங்க‌
அவன் ஆங்கில‌ மருத்துவம் பரப்பியதால்
நம் அத்தனை மருத்துவம் மறந்துவிட்டோம்....
சித்த‌ ஆயுர் வைத்தியரை அவன்
அழித்துக் கொன்று விட்டதினால் நாம்
ஆங்கிலேயே டாக்டர்களின்
காலில் விழுந்து கிடக்கின்றோம்....
பழந்தமிழ் உணவு மறந்து
நோய்பிடித்து சாகிறோம்
அத்தோட‌ அவனும் நிக்கலியே
அவன் சொந்த‌ மதத்தை பறப்பிவிட‌
நாம் நம் பாரம்பரியம் மறந்துவிட்டோம்
நம்மை படைத்த‌ வனையும் மறந்துவிட்டோம்
தாய்தமிழை ஈனபாசை என்றான்
தமிழ்த்தாய் கண்ணீர் விடுகிறாள்
ஆங்கிலம் வளர்த்தான் அவன்
ஆதிக்கம் விதைத்தான்
எத்தனையோ நாட்டையெல்லாம் அவன்
அடிமைபடுத்தி, இரத்தக் குழியல் குளித்துவிட்டு
அன்பு என்று வேடமிட்டான்... அவன்
அரசியல் மதத்தை நம்மேல் திணித்துவிட்டான்...
கருப்பை திட்டிய‌ வெள்ளையனோ நம்
கருப்பன் காந்தியின் முன்னே தோற்றான்...
விடுதலை பெற்றும் நாம்
ஆங்கிலமொழிக்கும் அவன் அரைகுறை
நாகரீகத்திற்கும் இன்னும்
அடிமையாக‌ இருப்பதுவோ?
நாம் அன்னிய‌ துணியை எறித்தது போல்
அன்னிய‌ மொழி மோகம் மறந்து
அன்னை தமிழை வளர்த்திடுவோம்

வாழ்த்து மழையில் மனதை மகிழ்வித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்..!!!


அன்புள்ள அக்ரம் ஷா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே