karthiskva- கருத்துகள்

மன்னிக்கவும் ரமேஷ். உன் துன்பங்களையும் தோல்விகளையும்
பகிர்ந்து கொள். நீ மறந்து போன புன்னகையைக் கூட மீட்டுத் தருவாள்.
நட்பையும் கடந்த ஓர் உன்னதமான உறவு காதல்.
அதில் எதையும் மறைக்க வேண்டாமே
(காயப்படுத்திய நம் தோல்வி கண்ட முதல் காதலையும் சேர்த்து)

எத்தனையோ நாள் நினைத்ததுண்டு என்ன பயன் என் கவிதைகளால் எனக்கும் எல்லோர்க்கும் என்று
ஆனால் இன்று பெருமைப்படுகிறேன்.
எனக்கு ஒரு உடன் பிறப்பை பெற்றுத் தந்ததில்.
நன்றி சகோதரா !

அழகான கவிதை கவின்.
எங்களையும் நனைத்து விட்டுச்
சென்றது உங்கள் கவிதைச் சாரல்.

நன்றி அருண். என் முதல் சிறு கதைக்கு முதலில் வாழ்த்து அனுப்பியமைக்காக.

நன்றி. இனி அரசியல் விவாதங்களும் நடைபெறும் இந்த அரங்கில் என எதிர்பார்கிறேன். எந்த கட்சி என்பது பற்றி குறிப்பிடவில்லையே ?

நுகர்வோர் உரிமைச்சட்டம்
காலாவதியானது”
அரசு அறிவிப்பு..!
இல்லாத விஷயத்திற்கு
சட்டம் எதற்கு..?
அமைச்சர் விளக்கம்.!

மின்சாரத் தடை பற்றி சொல்ல மறந்து விட்டீரோ !

நீர் அரசியலில் குதித்தால் என்ன ?

"அபியும் நானும்" என புதுக் கட்சியை துவங்குவோமா ?

இது வெறும் கதைதான் என்று தெரிந்திருந்தும் மனம் அழுகிறது. அறிவுக்குத் தெரியும் பல விஷயங்கள் மனதிற்கு தெரிவதில்லை. நல்ல படைப்பு.
இருந்தும் சோகத்தை மறக்கவே எழுத்து.காம் பார்க்கிறோம். வேண்டாமே இங்கும் சோகம்

அருமையான சிறுகதை ஆனந்த் ஆழமான அர்த்தத்துடன்.
keep writing

ஆம் ! உண்மைதான் நாமும் குழந்தைகளாகவே இருந்திருக்கலாம்...

இப்போது தான் புரிகிறது
" வாழ்வில் முன்னேற வேண்டாம்
பின்னேரத் தான் வேண்டும் - மீண்டும்
குழந்தையாகனும் "
என்னும் கவிதை வரிகளின் அர்த்தம்

பின் குறிப்பு :
ஆயிரம் பொற்காசுகளை முடிந்த வரை என் வங்கிக் கணக்கில் போட்டு விடவும்

கவிதை என்பதே பொய்யின் சாராம்சமாகும் அதிலும் மென்மையான பொருளை பெண்ணிற்கு ஒப்பிட்டே பழகி விட்டது இந்த உலகம்.
சூலகம் மகரந்தம் என இரண்டையும் பூக்கள் கொண்டிருந்தாலும் ஆணை போல வண்டுகள் இல்லவிட்டால் பூக்கள் பூப்பெய்தியதும் வீணே!


karthiskva கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே