Sulochana Iits Profile - முனைவர் நாசுலோசனா சுயவிவரம்வாசகர்
இயற்பெயர்:  முனைவர் நாசுலோசனா
இடம்:  சிவகாசி, சென்னை, தமிழ்நாடு
பிறந்த தேதி :  28-Jun-1975
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Oct-2016
பார்த்தவர்கள்:  14
புள்ளி:  2

என்னைப் பற்றி...

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறேன்.

என் படைப்புகள்
sulochana iits செய்திகள்
sulochana iits - sankaran ayya அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Nov-2016 9:33 am

பீலிபெய் நற்புகழ் மாமகுடம் இற்றுடையா
பீலி மிகுந்துபெயி னும்

---இது எனது குறள் வெண்பா .
இதைப் படிக்கும் போது திருக்குறளின் வள்ளுவர் வரிகள் உங்களுக்கு
நினைவுக்கு வந்திருக்கும் .
அந்தக் குறள் வரிகள் என்ன ?
வள்ளுவர் சாகாடம் பற்றி சொல்கிறார் . நான் மகுடம் பற்றி சொல்கிறேன் .
இரண்டு பற்றியும் உங்கள் எண்ணங்கள் என்ன ?
---கவின் சாரலன்

மேலும்

சற்று வித்தியாசமாக வள்ளுவர் குறளுக்கு விளக்கம் சொல்ல முயன்றிருக்கிறீர்கள் . அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும் தானை படைத்தகையால் பாடு பெறும் ----படை மாட்சியில் வள்ளுவர் கொல் திறனும் பகைவனை தடுக்கும் ஆற்றலும் இல்லாவிடினும் தானையை நடத்திச் செல்லும் துணிச்சலால் பெருமை பெறுவான். டென்னிசனின் CHARGE OF THE LIGHT BRIGADE படித்துப் பாருங்கள். உங்கள் வித்தியாசமான அணுகு முறையைப் பாராட்டுகிறேன் . மிக்க நன்றி இலக்கியப்பிரிய சுலோச்சனா அன்புடன்,கவின் சாரலன் 04-Dec-2016 10:06 pm
மென்மையானது என்பதற்காக மயிலிறகை அளவுக்கு மீறி வண்டியில்(சகடம்) ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துவிடும். அதைப்போல பகைவர்களின் பலத்தை அறியாமல் அவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டுபோனால் நம் பலம் முறிந்துவிடும். ஒருவரின் திறனுக்குக் கிடைத்த பரிசுக்கு என்றுமே அழிவில்லை. 04-Dec-2016 8:14 pm
மயிலிறகை அளவுக்கதிகமாக ஏற்றி அச்சு முறிந்தே போனாலும், ஒரு மனிதனுக்கு அவனது திறமையால் கிடைக்கின்ற நற்புகழ் என்கிற மாமகுடம் என்றும் இற்று உடையாது. என்பது எனது எண்ணம், இருந்தாலும் சரியான பொருளா என்று தெரியவில்லை ஐயா, விளக்கமளியுங்கள்... 02-Dec-2016 5:46 pm
குறள் மிகவும் சரி . விளக்கமும் மிக அருமை . மேலே உள்ள குறளுக்கும் உங்கள் மேலான விளக்கம் என்னவோ ? மிக்க நன்றி இலக்கிய பிரிய சாக்ஷி அன்புடன்,கவின் சாரலன் 02-Dec-2016 4:29 pm
sulochana iits - raghul kalaiyarasan அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Nov-2016 1:19 pm

தற்போது பெண்களுக்கு பெண்ணுரிமை உள்ளதா?
ஆண்களும் பெண்களும் சமமாக மதிக்கப்படுகின்றனரா?
இல்லையேல் தாழ்த்தப்படுவது யார்?

மேலும்

முழுமையாகக் கிடைக்கவில்லையென்றாலும் மாற்றங்கள் ஏற்படுவதைப் பார்க்கமுடிகிறது. பல ஆண்டு அடிமைத்தனத்தை அவ்வளவு எளிதில் மாற்றிவிடமுடியாது. 04-Dec-2016 8:02 pm
என் உரிமை நீ - என்று அன்பை பொழியும் ஆண்களும் இங்கு உண்டு. உன் உடைமைக்காகவே நான் என்று - வெட்டி எறியும் பெண்களும் இங்கு உண்டு. பெண்ணுரிமை பற்றிய பேச்சுகள், இங்கு உண்மையில் பெண்கள் ஓட்டுக்காகவே முளைக்கும் அங்கங்கு, அவ்வப்போது. நமக்கெதுக்கு இது. மனித உரிமை பத்தி பேசுங்களேன். 01-Dec-2016 10:53 pm
பொட்டு* 01-Dec-2016 10:21 pm
இதற்கு நேரடியான பதில் கூறுவது கடினம். பெண்ணுரிமை என்ன என்பதை ஒரு ஆண் விளக்குகிறான் என்றால் அதில் முழுமையான பெண்ணுரிமை இருக்க வாய்ப்பு இல்லை. தாலி, மெட்டி, நெத்தி போட்டு, விதவை கோலம், பர்தா என பல பெண்ணடிமை சின்னங்கள் இன்றும் இருக்கும் பட்சத்தில் பெண்ணுரிமை இன்றளவும் ஏட்டில் மட்டுமே இருப்பதாக தான் தோன்றுகிறது. 01-Dec-2016 10:20 pm
sulochana iits - BastinBharathy அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Dec-2016 2:24 pm

நான் எப்படி எனது சிறு கதையை எழுத்து தlaத்தில் pathivu செய்வது?

மேலும்

திரையரங்கங்களில் தேசிய கீதம் ஒலிக்கச் செய்வதின்மூலம் தேசப்பற்றை வளர்த்துவிடமுடியாது. அது குருதியில் கலந்த தேச உணர்வாக இருக்கவேண்டும். 04-Dec-2016 7:56 pm
sulochana iits - prakasan அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2012 12:42 pm

இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ?

மேலும்

I want any job 29-May-2017 9:02 pm
மாறாத நினைவுகள் கொண்ட என் சிறுவயது காதல் மாறும் வயதில் என் காதலும் மாறுமா என் அகம் தொட்ட கள்வன் என்று வருவான் என நான் காத்திருந்து என் கண்களும் ஏங்குகிறது வருவானா அவன் என் நினைவை நிஜமாக்குவானா 13-May-2017 9:25 pm
வராத விருந்தாளி வந்தார் இன்று காணாத சுகத்தை தந்தார் இன்று நாளையும் வருவாரோ நம் மண்ணையும் மனதையும் குளிர்விக்க மழை வருமோ நாளை மண்ணையும் மனதையும் குளிர்விக்க 11-May-2017 10:32 pm
கடினமானதுதான் வாழ்க்கை ஆனால் முடியாதது என்பது இல்லை கரடுமுரடானதுதான் வாழ்க்கை ஆனால் வாழ்வே இனிமையானதுதான் இன்பமும் துன்பமும் இணைந்ததுதான் வாழ்க்கை அனுபவித்தாள் வாழ்வே சுகமானதுதான் தடுப்பு சுவர்கள் பல வந்தாலும் வாழ்ந்து பார்த்தே தடைகளை தாண்டிடுவோம் எதிர்ப்பு எதிரில் வந்தாலும் எதிர்த்து நின்று நீந்திடுவோம் வாழ்க்கையை உயிர்ப்புடன் வாழ்வோம் அது நம்மை வாழ வைக்கும். 11-May-2017 10:27 pm
sulochana iits - vaishu அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
25-Oct-2016 3:24 pm

பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் இந்த வார்த்தைகளுக்கு இடையேயான வேறுபாடுகள் என்னென்ன?

மேலும்

கலாச்சாரத்திற்குரிய தமிழாக்கம் தான் பண்பாடு ஆகும். நாகரிகம் என்பது அறம், பொருள், இன்பம்கண் உடையது. நஞ்சும் உண்பர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் எனும் புறநானூற்று அடியிலுள்ள நாகரிகம் என்பது நட்பின் ஆழத்திற்கும், நம்பிக்கைக்கும் சொல்வது. நாகரிகம் என்பது கால்த்திற்கேற்ப மாறக்கூடியது. பண்பாடு என்பது மாறாதது. ஒருவனுக்கு ஒருத்தி என்பது பண்பாடு. பாடறிந்து ஒழுகுதலாகும். நாகரிகம் என்பது கொள்கையைப் போல மாற்றத்திற்குரியது. பண்பாடு என்பது கோட்பாடுபோல மாறாதது. 26-Oct-2016 11:07 pm
கலாச்சாரம் என்ற மணிப்பிரவாள சொல்லிற்கு நிகரான தமிழ்ச் சொல் பண்பாடு . நிலத்தை பண்படுத்துதல் போன்று மனிதனை மனித மனத்தினை பண்படுத்தும் வளப் படுத்தும் காரணப் பெயராக உருவாக்கப் பட்டிருக்கலாம் . நஞ்சும் உண்பர் நயத்தக்க நாகரீகர் என்று பழைய தமிழ் வரியுண்டு. மேம்பட்ட மனித இயல்பை குறிக்கும் சொல். இதுவும் மணிப்பிரவாளச் சொல் என்று கருதுகிறேன் மணிப்பிரவாளம் தற்சம தற்பவ விதிகளுக்குட்பட்டு தமிழில் கலந்த வடமொழிச் சொற்கள் .வைணவ இலக்கியங்களில் இவைகள் மிகுந்து காணப்படும். அன்றாட வாழ்க்கையிலும் இவைகள் நிரம்பப் பயன்பாட்டில் உள்ளன . சிறப்பான கேள்வி அன்புடன்,கவின் சாரலன் 26-Oct-2016 9:43 am
sulochana iits - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2016 10:19 pm

என்
இதயக் கமலத்தில்
ரோஜாவை
நட்டு வைத்தாய்!

அன்பிலும் பாசத்திலும்
பூத்துக் குலுங்கியது
ரோஜா மட்டுமல்ல
என்
இதயக் கமலமும்தான்...

ரோஜாக்களைப்
பறிக்க வந்தவன்
பறித்தது
ரோஜாக்களை அல்ல....
வளர்ந்து
பூத்துக் குலுங்கிய
ரோஜாச் செடியை....!

மேலும்

தொடக்கத்தை தேடி முடிவை பெறுகிறது வாழ்க்கையில் பல கதைகள் 01-Nov-2016 7:51 am
sulochana iits - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2016 10:01 pm

பொன் நகை
வேண்டாம்
புன்னகை மட்டும்
போதுமென்றார்கள்!

எல்லோரும்
தலையாட்டினார்கள்
நானும்
ஆட்டினேன் தலையை....

ஒரு நாள்
தலை அசைத்தற்காக
காலமெல்லாம் கிடைக்கவில்லை.
புன்னகையும் பொன்நகையும்.....

கைத்தடியுடன் இருக்கிறேன்
நானும் எதிர்பார்ப்புடன்
புன்னகைக்காக.....

திருமணம்
சொர்க்கத்தில் நிச்சயக்கப்படவில்லை
சொர்ணத்தில்
நிச்சயக்கப்படுகின்றன
திரும்பிப் பார்க்க வைக்கிறது
என்னை மீண்டும் ......

மேலும்

கடந்து சென்ற நினைவுகளின் பாதி நிகழும் அதிகாரத்தின் மீதிகளே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Nov-2016 7:45 am

சென்ற வாரம் கவிஞர் எழில்வேந்தன் அவர்களின் “மங்கையராகப் பிறப்பதற்கு” எனும் கவிதை படித்தேன். அது 2002 இல்  தாமரையிலும் ஆறாம் திணை.காமிலும்   வெளிவந்த கவிதை. என் எண்ணத்தில் உதித்தவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.  

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

famakfana

famakfana

துபாய் - ஐக்கிய அரபு அமீரக
sekara

sekara

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (2)

sekara

sekara

Pollachi / Denmark
famakfana

famakfana

துபாய் - ஐக்கிய அரபு அமீரக

இவரை பின்தொடர்பவர்கள் (2)

sekara

sekara

Pollachi / Denmark
famakfana

famakfana

துபாய் - ஐக்கிய அரபு அமீரக
மேலே