இனியும் வேண்டாம் இப்படியொரு பிறவி(குழந்தை ஆன்மாவின் அலறல்)
இனியும் வேண்டாம் இப்படியொரு பிறவி
(குழந்தை ஆன்மாவின் அலறல்)
இல்லையென்று ஆயிரம் பேர்
அரசமரம் சுற்றி வர அகிலமும் இழந்தும்
தவமிருந்தும் கிடைக்காத வரமன்றோ நான்
உன் கைய்யளவு கருப்பைய்யில்
மெல்லிய சதைக்கொண்ட வலிக்
கொண்ட உயிராய் அழகாய் பூப்பூத்து
அன்னையென்ற அழியா வரமளித்தேன்
நினைக்காமல் சென்றாயோ
இருட்டிலே இருந்துக்கொண்டு
பிஞ்சுக்கைகள் கட்டப்பட்டும்
இடது கை மட்டும் தனியே
துடிப்பது தெரியவில்லையா
ஆசையாய் ஆவலாய் அடுத்து
வரும் எட்டுமாதங்களில் கண்
விழித்து காண விரையும் உலகம்
கரம்பிடித்து நடக்கநினைக்கும் சொந்தங்கள்
ஆக்கம் தந்தவனும் காக்க
நினைக்கவில்லை அறிந்து
சுமந்தவளும் அருமை அறியவில்லை
இனியாரோடு மன்றாடுவேன் என்னுயிருக்காய்
எனையழிப்பதாய் கூரியகணம்
சுரந்த என்கண்ணீர் கரைந்துக்
கொண்டிருக்கிறது கருமுட்டை
சுமந்த நீருடன்,,ஆழ்ந்த மௌனத்தில்
செய்வதறியாது மரணத்தை வரவேற்கிறேன்
வலியில்லாமல் கொண்டுசெல் இறைவா
இனியொருமுறை இந்த ஜென்மமென்றால்
இது எனக்குவேண்டவே வேண்டாம்
என பாவமாய் இறைஞ்ஜினேன்
நஞ்சுண்டு தாங்காமல் விம்முமென்
பிஞ்சு இதயத்தின் வலியதை யாரறிவார்,,
உயிர்கூச்சலிட்டு கரையும் குழந்தை
ஆன்மாவின் கெஞ்சல் விண்ணப்பம்தனை இங்கே,,,,,,
ஆர்ப்பரிக்கும் அசுரக்கரைச்சல்கள் என்
செவிகளை கொடூரமாய் ஆட்கொள்ளுகிறது
உறக்கத்தினிடையிலே
நெட்டித்தெழுகிறேன் அம்மா
அத்தனையும் என்னைப்போல் மரணித்தவர்கள்,,
இல்லை இல்லை கருக்கொலை
செய்யப்பட பாவக்குழந்தைகளின்
ஆன்மாவின் அலறல் சத்தங்கள்,,,,
அகண்டிருண்ட அத்தேசத்திலே
உத்தேசமாய் ஆறுதல் சொல்லிவிடகூட
ஒரு அன்னை தந்தை இல்லாத பாவங்களாய்,,,
அனுசரன்,,,