................முடிவிலா உறவு ................
தொடுவானமும் தண்டவாளமும்,
தூரத்தில் இணைவதாகவே தோற்றமளிக்கும் !
நெருங்க நெருங்க பிரிந்தே பரவும் !
அப்படியாகிவிட்டதோ ?
எனக்கும் அவளுக்குமான காதல் !!
உடனிருந்தாலும் உறுதியாய் இருக்கிறாளே !
எனை துண்டித்து தூரப்போடுவதில் !
காதலுக்கும் அந்திமகாலம் இருக்கும்போல !
எவ்வளவு உயர்ந்து பார்த்தாளோ !
அவ்வளவு தாழ்ந்து பார்க்கிறாள் என் உறவை !
இதுவெல்லாம் கடந்துபோகவேண்டாம் !
இங்கேயே கிடந்து முடியவேண்டும் நான் !!