என்றும் மறக்காத கிராமத்து நினைவுகள்

நீரோடும் ஓடை
ஓடையை ஒட்டிய சாலை
சாலையை ஒட்டிய பனைமரங்கள்
பனைமரங்களில் விளைந்த பனங்காயும்
பங்குபோட்டு உன்ன நண்பர்களும் .........

மலையோரம் மாந்தோப்பு
மாமரங்கள் நிறைய மாங்கனிகள்
மடிமடியாய் பறித்து தின்றதும் ..........

ஆத்தோரம் தென்னன்தோப்பு
அழகழகாய் அணிவகுக்க
கொத்துகொத்தாய் தேங்காயும் இளநீரும்
வெட்டிகொடுத்த வேலைக்கார தாத்தாவும்
நீந்திப்பழகிய ஆறும் ..............

நிலமெல்லாம் பசுமைபோர்த்தி
எங்கெங்கும் வயல்வாசம்
களையெடுக்கும் பெண்களங்கே
பாடியிருக்கும் நாட்டுப்பாட்டும் .........

காலையில் கூவி எழுப்பும்
கோழியின் குரலும்
கொக்கும் , பறவை கூட்டங்களும்
பாடும் குயிலும்
ஆடும் மயிலும் ...........

ஊர் ஒட்டாய் ஏரிக்கரை
உணவு தேடும் பசுமாடுகள்
ஏரியிலே மீன் பிடித்து
ஆக்கி தின்ற கூட்டான் சோறும் ......

உலுக்கி சாப்பிட்ட நாகர்ப்பழமும்
சுட்டு சாப்பிட்டா புளியங்காயும்
திருடி சாப்பிட கொய்யாபழமும்
அடித்து உண்ட விளாங்காயும் ........

ஆலமர நிழலிலே
அருகருகே ஊர்மக்கள்
அதன் நடுவே நாட்டாம்மை
நாட்டம்மை தந்த விசேஷ தீர்ப்புகளும் ......

அம்மன் கோவில் திருவிழா
அங்கு விற்ற பொம்மைகள்
அதைகேட்டு அழுத நிமிடங்களும்
சுற்றிய ராட்டின சுற்றல்கலும் ..........

கோட்டி புல்லும்
கபடிக்குழுவும்
கிரிக்கெட் மட்டையும்
கன்னாம்பூச்சியும்
நீச்சல் விளையாட்டும் ........

ஆட்டோடும் மாட்டோடும்
செல்லமாய் கழித்த நாளும்
பொங்கலன்று குடும்பத்தோடு
பொங்கிய பானைசோரும்..........

சுட்டெரிக்கும் வெயிலிலும்
இதமான கிராமத்து காத்தும்
சுத்தமான சுவாசம்
இரைச்சல் அற்ற வாழுவும்
சுத்தமான மனங்களும் ..............

நகர வாழ்க்கையை தேடிப்போய்
நரக வாழ்க்கையில் மாட்டிக்கொண்டேன்
இங்கு பணம் மட்டும் பை நிறைய கிடைத்தது
மனம் ஏனோ அமைதி இழந்தது ......

ஓசியாய் வாங்கிய காத்தையும்
ஈசியாய் கிடைத்த நீரும்
காசாகிப்போனது போல்
நகர வாழ்க்கையில் வெறுப்பே மிஞ்சுது
நரகமாய் நெஞ்சு உணருது ..........

எழுதியவர் : வினாயகமுருகன் (14-Apr-13, 11:27 pm)
பார்வை : 1650

மேலே