எத்துனை அழகு அந்த நிலவுக்குத்தான்...

வண்ணம் தீட்டிக் கொள்ள விழையில்லையோ,
வெண்ணிற மேனியுடனே அலைகிறாய்..
வயதில் நீ முதிர்ந்த போதும்,
வாலிபர்க்கு என்றும் காதல் உவமை நீதானே..

வீசிய காற்றில் குளிர் காய்ந்து,
வீற்றிய ஆசனத்தில் புறம் சாய்ந்து,
வானத்து அவையில் அரசேற்று,
வீதிகளையெல்லாம் மேற் பார்வையிட்டாய்..

பால் வண்ண நிலா பதுமை போல,
பார் முழுக்க பாவலர் உனைப் பாட,
கர்வம் கொண்டு தலைக்கனம் கண்டாயோ,
கார்முகிலன் உயர் சென்று மண்ணை மறந்தாயோ..

நீ தேயும் காலம் பிறக்குமன்று,
உன் தேகம் நிலையாய் குறையுமன்று,
ரணக் காயம் உண்டாகும் உன் நிலையைக் கண்டு,
நீ நிலையாய் மறைந்து போவாயோ என்று..

மண்ணில் பூத்த பூவெதுவும்,
உன்னைப் போல் அழகும் இல்லை..
ஆனால்,
விண்ணில் நீ பூக்கும் காலம்,
அது இரவு மட்டும்தான்,அதுதான் தொல்லை..

பிள்ளைக்கு தாயவள் சோற்றை ஊட்ட,
வெள்ளை மாயவள் உன்னை அழைத்தாள்,
அப்போது
சேயும் தாயும் மனங்குளிர,
காயும் நிலா நீ, தரை வந்தால்தான் என்ன..

இரவுக்கு உறவென்று எவருமில்லை,
இறைவன் படைத்தான் அதனால் உன்னை,
ஈரக் காற்று உடன் பிறந்தவள் நீயோ,
இரவை மணந்து,
தினம் இரவை அவனுடன் கழிக்கிறாயே..

இமை சிமிட்டா உன் அழகைக் கண்டு,
இரவைக் கழிக்கிறேன் தனியாய் இன்று,
இரவலொன்று இறைவனிடம் கேட்க நேர்ந்தால்,
இப்படியே உனை ரசிக்க வேண்டும், இது போதுமென்பேன்.!

எழுதியவர் : பிரதீப் (20-Apr-13, 9:43 pm)
பார்வை : 111

மேலே