பணம் வரவும் முடிவும்

பணம் எனும் மூன்றெழுத்து
வாழ்வு எனும் மூன்றெழுத்தில்
வரவு எனும் மூன்றெழுத்தாகி
உறவு எனும் மூன்றெழுத்தால்
தழுவி எனும் மூன்றெழுத்தாகி
அகம் எனும் மூன்றெழுத்தில்
சுகம் எனும் மூன்றேழுத்தாகி
அன்பு எனும் மூன்றெழுத்தும்
பாசம் எனும் மூன்றெழுத்தும்
நேசம் எனும் மூன்றெழுத்தும்
விலகி எனும் மூன்றெழுத்தாகி
அமைதி எனும் மூன்றெழுத்தும்
அறவே எனும் மூன்றெழுத்தாகி
நீங்கி எனும் மூன்றெழுத்தாய்
சோகம் எனும் மூன்றெழுத்தால்
முடிவு எனும் மூன்றேழுத்தாகும்
இறுதி எனும் மூன்றெழுத்தால் !
பழனி குமார்