கூலி வேலைகளும் அதில் குறுகிய மனங்களும்

மரத்தினை அறுப்பவர் வாழ்வில்
மலர்ச்சி இல்லை - மண்

பாரம் சுமப்பவர் வாழ்வில்
வளர்ச்சி இல்லை

வண்டி இழுப்பவர் வாழ்வில்
பெருமை இல்லை - பணம்

தண்டி வாழ்பவர் வாழ்வில்
பொறுமை இல்லை

உடலை வதைத்தே சிலர்
உயிர் வாழ்வார்

குடலைக் காட்டியே - பலர்
வயிர் வளர்ப்பார்

தான் உண்ட இலையைக்கூட- சிலர்
தொடமாட்டார்

ஊர் உண்ட கழிவைக்கூட - பலர்
அணைத்து அள்ளுவார்

கொல்லும் சொல்லையும்
வாங்கிக்கொண்டு - சிலர்

வில்லும் அம்புமாய்
வேலைச் செய்வர்

தொல்லைகள் வாழ்வின்
எல்லைவரை தொடர்வதை
கொள்ளிட முடியாதோ

பள்ளிகள் இருந்தும் பயனென்ன
வாழ்வின் வழி காட்டுதலைக் கற்றிட முடிந்திடுமோ

இறுகிய எண்ணங்களைத் தொலைத்தேரிந்து
இதயத்தை சமன் செய்து
ஒற்றுமைக் காண்போம்

எழுதியவர் : சி.எம் .ஜேசு (8-Jun-13, 1:09 am)
பார்வை : 74

மேலே