வெவ்வேறு இடங்கள்

மகன் ஒருவன் தந்தையை
அன்போடு கைப்பிடித்து
அழைத்து சென்றான் அங்கே !
அவன் காட்டிய இடமெலாம்
சோகமுடன் கையெழுத்திட்டார்
மலர்ந்தது மகனின் முகம் !
மறுநாளும் அழைத்து சென்றான்
தந்தையின் கைப்பிடித்து மகனும்
ஆனாலும் மாற்று இடமது !
மகன் கையெழுத்திட்டான் அங்கே
இன்பம் பொங்கியது அவனுள்
தந்தையின் உள்ளமோ அழுதது !
முதல் இடம் - பத்திர பதிவு அலுவலகம்
இரண்டாம் இடம் - முதியோர் இல்லம்
புரிந்திருக்கும் உங்களுக்கு
தந்தையின் மனமும்
மகனின் உள்ளமும் !
படிக்கும் நம் மனதோ வலிக்கிறது ...
பழனி குமார்