குறையை சொல்லவா
கடலில் தத்தளிக்கிறேன்....
தனிமையில் கொந்தளிக்கிறேன் ....
தவறு எதுவும் செய்யவில்லை...
என் தனிமைக்கு காரணம் நானில்லை...
தத்தி தத்தி தாவும் வயதில்...
தாவி அணைக்க அவள் என் அருகில் இல்லை ...
தரணி எங்கும் அழைக்கும் அவளை ....
என் கண்கள் பார்த்ததில்லை...
இருப்பவர்கள் எல்லாம் அனைத்து கொண்டார்கள்..
யார் என்று தெரியாமல் அன்பு கொடுத்தார்கள்..
அறியாமல் நானும் நடை பழகி விட்டேன் ...
யார் கையையோ பிடித்து வளர்ந்து விட்டேன்..
அறிவு என்னும் ஒன்று வளர்ந்து விட்டது...
ஆதரவு இல்லாதவன் நான் என்று புரிந்து விட்டது...
ஆத்திரத்தில் என்னை கொன்று விடவா ..
ஆன்மாவை கொடுத்தவளை என் வாயால் சபித்துவிடவா...
இதயத்தோடு என்னை படைத்தவளுக்கு ...
இதயம் இல்லாமல் போனது எதற்கு...
தெரியாத வயதில் கடலில் தள்ளி விட்டாயே..
உன் தவப் புதல்வனை தனிமையில் நிக்கவைத்து விட்டாயே...
காரணம் உன்னை கேட்க்கவில்லையடி தாயே...
என் கண்ணீரை துடைக்க உன் கரங்கள் வேண்டுமடி தாயே..
காலமெல்லாம் நீ என்னுடன் வேண்டாமடி தாயே..
என் கண்கள் மூடும் முன் உன்னை ஒருமுறை கட்டி அணைக்க வேண்டுமடி தாயே...
காலத்தின் கொடுமை நீ என்னை பிரிந்தது ..
அதை விட என்னை கல்லறையில் அடைத்திருந்தால் சிறந்தது...
அம்மா என்பதன் அர்த்தம் புரிந்த போது..
அதை அழைக்க என் உதடுகள் துடிக்கின்றது...
ரத்தத்தின் ஓட்டம் என்னுள் நிற்கின்றது...
என் நிலைமை மோசம் அடைகின்றது ...
என்னை கொள்ளாமல் விட்டு விட்டாயே என மனம் சொல்லுகின்றது..
கொதிக்கும் எண்ணையும் என்னை அழைக்கின்றது...
கோபத்தில் என் கண்கள் சிவக்கின்றது..
உன்னை அம்மா என்று அழைக்க இதயம் துடிக்கின்றது...
என் ஆயுளெல்லாம் உன்னை நினைத்து அழுது தீர்க்க...
என்ன தவம் கேட்டாயோ உன் மடியில் நான் பிறக்க..
என் வாழ்வில் ஒருமுறையாவது உன்னை அம்மா என்று அழைக்க...
உயிரோடு இருக்கிறேன் உனக்காக...
தனிமையில் நான் உன்னை எண்ணி ..
தாயை பிரிந்து நிற்கும் கோழி குஞ்சிடம் என் குறையை சொல்லி...