ஆதவனும் தோற்பானோ
எண்(ண)லைகளும் மொழியி(ன்)தழ்களும்
மேள தாளமில்லாமல் அழ(கு)கூட்டும்
வீணையின் தந்திபோல்
பரிமாறிக் கொள்கின்றன
அன்பின் ராகத்தையும்
பாச(ச)ந்தங்களையும்...!
விழியி(ன்)றகுகள் அங்குமிங்கும்
அசைந்தும் அசையாமலும்
பகிர்ந்துகொள்கின்றன
சந்திக்கும் தூரமெங்கிலும்
இங்கிருந்தபடியே...!
அழைக்கின்றது ஒவ்வொரு பொழுதும்
ரூபாய் நாணயம் குறை நிறை
மாறாமல் நாணமின்றி நாணியே..!
காத்திருக்க வைக்கின்றது
சிறிய நாசி (இதயத்து)க்குள்
எத்தனை எண்ணங்கள் மொழிகள்
கண்ணுக்குள்ளே அசையாமல்
உருவமில்லாத காற்றைப்போல ...!
அழைப்பை எதிர்பார்த்து
எதிரொலிக் கேவலுக்காக
காத்திருக்கின்றது அமைதியாக
அறிமுகம் காணாமல்...!
சாய்ந்தும் சாயாமலும்
ஓய்ந்தும் ஓயாமலும்
உணர்ந்தும் உணராமலும்
அனுபவமில்லாமலும் அகலாமலும் ...!
உழைப்பாளியின் வியர்வைபோல்
இரவும் பகலும் பாராமல்
ஆதவனும் தோற்பானோ..?
குறுந்தகவல் அனுப்புவதில்
காத்திருக்கின்றது அழைப்பின்
பரிமாறுதல்களில்
வணக்கங்களையும் நன்றிகளையும்....!
வீணையின் சுருதி போல
நுனி விரல்களின் இடுக்கில்
பொதிந்திருக்கின்றது
எண்ணங்களும் உரைகளும்....!
வடகலையும் தென்கலையும்
மென் கூந்தலை வருடியே
''ஓம்''என நாசி இதயத்தில் நுழைந்து
அகமும் புறமும் நனைந்து
இரு செ(வ்)விதழ்களில்...