25 நான் ஏன் ஜொலிக்கவில்லை

சொந்தக் கவிதை -25
நான் ஏன் ஜொலிக்கவில்லை

பேசும்திறன் எனக்கிருந்தும்
மேடைப் பேச்சாளறாய் நான் ஜொலிக்கவில்லை
ஏனெனில் எனக்கொரு சாலமன்பாப்பையா கிடைக்கவில்லை.

பாடும்திறன் எனக்கிருந்தும்
பின்னணிப்பாடகனாய் நான்உள்ளம் கவரவில்லை
ஏனெனில் எனக்கொரு இளையராஜா கிடைக்கவில்லை.


நடிப்புத்திறன் எனக்கிருந்தும்
நல்லதொருநடிகனாய் நான் நெஞ்சில்நிற்கவில்லை
ஏனெனில் எனக்கொரு பாலச்சந்தர் கிடைக்கவில்லை.


கவித்திறன் எனக்கிருந்தும்
புதுக்கவியாய் நான் வலம்வரவில்லை
ஏனெனில் எனக்கொரு கண்ணதாசன் கிடைக்கவில்லை.


எழுதும்திறன் எனக்கிருந்தும்
எழுத்தாளனாய் நான் மலரவில்லை
ஏனெனில் எனக்கொரு சோ கிடைக்கவில்லை.


வடிக்கும்திறன் எனக்கிருந்தும்
சிற்பியாய் நான் மனதில்நிறையவில்லை
ஏனெனில் எனக்கொரு பல்லவராஜா கிடைக்கவில்லை.


வரையும்திறன் எனக்கிருந்தும்
ஓவியனாய் நான் விண்ணில் பறக்கவில்லை
ஏனெனில் எனக்கொரு ரவிவர்மா கிடைக்கவில்லை.


சமையல்திறன் எனக்கிருந்தும்
சமையல்வல்லுனராய் நான் சுவையைபடைக்கவில்லை
ஏனெனில் எனக்கொரு தாமோதர் கிடைக்கவில்லை.


விளையாட்டுதிறன் எனக்கிருந்தும்
எந்தவிளையாட்டிலும் நான் பதக்கம் பெறவில்லை
ஏனெனில் எனக்கொரு கவாஸ்கர் கிடைக்கவில்லை.


ஆனாலும் நல்லதொருஉள்ளம் அமைந்ததினால்
பாசத்தில் பலர்நெஞ்சில் நிறைந்து விட்டேன்
ஏனெனில் எனக்குபாசமிகு பெற்றோர் கிடைத்திருந்தனர்.

ஆகவே ஒன்றைஉறுதியுடன் சொல்வேன்
உங்கள் குழைந்தையிடம் ஆயிரம் திறமையுண்டு
ஜொலித்திட தேவை பெற்றோர் நம்பிக்கையும்

சமூகஉற்சாகமும் ஊக்குவிப்பும்
எனச்சொன்னால் அதுதான்உண்மை
அறுபதுவயதில் நான் உணர்ந்தபாடம்.

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (28-Dec-13, 5:33 pm)
பார்வை : 138

மேலே