உயிரற்ற உள்ளம்
புதைந்து
போன எனக்கு ஒரு
பேர் அதிர்ச்சி நான்
காண்பது
எவ்வுலகம்..!
எனக்குள்
கேள்விகளும் பதில்களும்
சண்டையிட்ட
வண்ணம் இருந்தது...!
உற்று
நோக்கினேன்
உலகத்தில் நான்
வாழ்ந்த காலம் என்
முன்னே நிழல்
போல தோன்றியது
உறவுகளை
மறந்து உறவற்ற
செல்வத்தோடு
உறவு கொண்டேன்
நிஜத்தை மறந்து
நிஜமற்ற
கனவை நிஜம் தான்
என்றேன்..!
உயிரை மறந்து
உயிரற்ற
உள்ளத்தை உயிர்தான்
என்றேன்...!
என் கண்
முன்னே நடந்த
நாடகம் கானல் நீராய்
போனதேனோ ...!
என்
உள்ளத்தில்
பதிந்த நினைவு
பகலிரவாய்
ஆனதேனோ...!
நிரந்தரமற்ற
வாழ்கையிலே
நிலையானதை தேடி
அலைந்தேனே..!
என் தவறை
உணர்தேன்
திருந்தியும் விட்டேன்
ஆனால் நானோ
உயிர் அற்றவனாக
இருக்கிறேனே..!
என் உயிரே
வந்துவிடு என்னை
நீ வாழவிடு