இயற்கையின் விசாரிப்பு இனிய காலைப் பொழுது

சிறு மழலையாய் நான்
சிங்காரத் தொட்டிலில் கிடந்தபோது...

ப்பே....என்றே முகத்தை மூடித் திறந்து
பிரியமுடன் பயங்காட்டி சிரிக்க வைப்பார்கள்

அந்த குழந்தை சிரிப்பு இப்போதும் வந்தது எனக்கு
அழகான இயற்கையின் அன்பான செய்கையால்

இரவுக் கையால் தன் முகத்தை மூடி
இனிய காலை முகத்தால் இப்போது

ப்பே....என்று பயன்காட்டவில்லை
ஹாய்..ஹரி என்று அன்புடன் விசாரிக்கிறது...

இயற்கை இனிமை....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (9-Jan-14, 5:10 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 69

மேலே