பட்சியின் பெயர் தமிழ்

பட்சியின் பெயர் தமிழ் ( பொங்கல் கவிதை போட்டி)¬¬¬
அகிலம் ஆழும் அரிவை கொண்ட அன்பு தமிழா
நடுநிசி இரவில் தமிழ் பட்சி சொன்ன செய்தி தரவா
நான்: பண்பை காக்கும் தமிழே நீ இரவில் பறந்து வந்ததேனோ
விடியலை காணவிருக்கும் என் கண்களுக்கு வாழ்த்து சொல்லத்தானோ
தமிழ்:வாழ்த்த வரவில்லை உன் தோழர்கள் வாழ்வதை கூறவந்தேன்
பறந்து உலா வரவில்லை போர் குற்றம் எதிர்த்து படை திரட்டவந்தேன்
நான்:அய்யகோ, உனக்காக என் வருத்தத்தை பதிவு செய்கிறேன்
என்ன வேண்டும் கேள் என்னால் முடிந்த உதவி செய்கிறேன்
தமிழ்:பிறந்து மண்ணை தொடும் முன்னே உன் தம்பி
மரணம் தொடுவதை தடுக்க வருவாயோ
கணவன் கண் முன்னே உன் தங்கை
கற்ப்பிழப்பதை தடுக்க வருவாயோ
வீரத்தை விழியால் சொன்ன உன் தந்தை
இன்று வலியால் துடிப்பதை காண வருவாயோ
வானம் அளவில் சேலை அணிந்த உன் அன்னை
மாணம் இழந்ததால் உன் கண்களை மூடி வருவாயோ
நான்: போதும், போதும் , தமிழே
எனக்கு தென்கிழக்கே இன்னும் விடியவில்லை
என்று அறிந்து கொண்டேன்
நாம் ஒற்றுமையாய் செய்ய வேண்டியது உதவி அல்ல கடமை என்று புரிந்து கொண்டேன்

இப்படிக்கு,
வளர்மதி (9952887452)
19 சனவரி 2014

எழுதியவர் : vinothhasan (20-Jan-14, 9:33 am)
பார்வை : 48

மேலே