எங்கள் வாழ்க்கை
கண்களில் வடிவது கண்ணீரல்ல
இரத்தம் !
பாய்வது நதி நீரல்ல
குருதி வெள்ளம் !
அடிபட்டு அடிபட்டு உணர்ச்சிகளற்றுப்
போனோம்
உடலசைவிருந்தும் நாங்கள் பிணமே !
பெண்ணாய் பிறந்துவிட்டேன்
வரமாய் பாலியல் வன்முறை !
குரல் கொடுத்து குரல் கொடுத்து
குரல்வளை அற்றுப்போனோம்
இனி உடலில் பெலனில்லை
உங்கள் ஐ .நா வால் எங்களுக்கு
பலனும் இல்லை !
ஆணாய்ப் பிறந்தேன்
நிர்வான கோலம் பூட்டி
குருவியாய் சுடப்படுகிறேன்!
போராடத் தெம்பில்லை
போராடியும் பலனில்லை !
நிலத்தை உழுவது மழைநீராலல்ல
எங்கள் கண்ணீரால்
இனி எங்கள் கண்ணீரை
அணைகட்டுங்கள்!
உங்கள் நீர் தேவைக்காய்
அதிலேனும் மகிழ்ச்சி கொள்கிறோம்
எங்கள் கண்ணீர் தேசத்தில் !!!