பாராட்டு வெண்பாக்கள் மரபுமாமணிக்கு - விவேக்பாரதி

இயற்கை விளையாட்டு--வெண்பாக்கள்-என்னும் எசேக்கியல் அய்யா எழுதிய வெண்பாக்களுக்கு இவை சமர்ப்பணம் !
============================================
நாடு உறங்குதப்பா ஆனாலும் உம்மைப்போல்
பாடும் கவிஞர் இருப்பதால் - கூடுநலம் -------(1)
யாவும் மேவியிங்கு நாடும் துயிலெழுமே
தேவிபரா சக்தி துணை !

கருத்து:
நாடு இருட்டில் உறங்கினால் என்ன ? உம்மைபோன்ற( எசேக்கியல் காளியப்பன் போல் ) கவிஞர்கள் சூரியனாய்த் திகழ கூடுகின்ற நலன்கள் யாவும் கொண்டு நாடு துயில் எழும் என்பது நிச்சயம் . இதற்கு தேவி பராசக்தி துணை நிற்பாள் .
*********************************************************************
துணையாய்ச் சூரியன் வருதே கவலை
நுனியளவும் வேண்டாம் உலகே - இனிமேல்நீ---(2)
ஜாலியாய் வண்ணமேழு தூவி விளையாடு
ஹோலிதான் என்றும் உனக்கு

கருத்து :
துணையாக (எசேக்கியல் என்னும் ) கவிச் சூரியன் வருதே இனிமேல்,உனக்கென்ன கவலை உலகே ! நீ ஜாலியாய் ஹோலி விளையாட்டை விளையாடு ஏழுவண்ண வானவில் கரைத்து தூவி விளையாடு .
**********************************************************************
உனக்கு இவனிருக்கான் துன்பத்தைப் போக்கி
மனதில் வளர்த்துக்கொள் அன்பைத் - தனமும்---(3)
அருள்வான் உனக்கே உலகே ! இவனின்
திருக்கை தொழுதிடு நீ

கருத்து :
உலகமே உனக்கென்ன தொண்டு செய்ய (எசேக்கியல் என்னும் ) தலைவன் இருகிறான்.
நீ துன்பத்தை மனதிலிருந்து விரட்டி அன்பைச் செமி .இவன் தனம் அருள்வான் உனக்கு . பாக்கள் வடித்திடும் இவனது திருவான கைகளைத் தொழுதிடு நீயும் !
*********************************************************************

எசேக்கியல் அய்யா வடித்த வெண்பாக்கள் என்னுள் மூட்டிய தீப்பொறியின் விளைவுகள் இவை . அவரை என் ஆசை தீரப் பாராட்டி எழுதியுள்ளேன் .

நேரத்தின் பற்றாகுறையால் வெறும் மூன்று மட்டும்தான் தளத்தில் சேர்க்க வாய்ப்பு கிடைத்தது .

********************************************************************
விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (19-Mar-14, 9:56 pm)
பார்வை : 181

மேலே