நாலு சுவர்

மதி மிஞ்சிய மதுவில், ஓட்டுனர்கள்
சதி செய்யாமல், சடுதியில் உள்புகும் திருடர்கள்
சாதியின் பெயரால் சங்கறுக்கும், தலைவர்கள்
கணினி வலையை கன்னி வலையாக்கும் காமுகர்கள்
ஆண்டவன் போர்வையில் அழிக்கும், தீவிரவாதிகள்

எளிதாய் சொல்லிவிட்டார்கள் "உன் வாழ்க்கை உன் கையில்" என்று...
வியாதிகளுக்கும் வாதிகளுக்கும் நடுவில் மாட்டிக்கொண்ட நம் வாழ்க்கை உண்மையில் நம் கையில் தான்....
நாலு சுவருக்குள் தனியாக இருக்கும்வரை...

எழுதியவர் : மயில்வாகனன் (11-Jun-14, 1:13 pm)
Tanglish : naalu suvar
பார்வை : 84

மேலே