நானும் இங்கு ஒருவன்
இல்லை என்பதன்
இருப்பிடம்
என் வீடு ......................!
பசி என்பதன்
இருப்பிடம்
என் வயிறு.................!
கண்ணீர் என்பதன்
சொந்தக்காரன்
நான் .......................!
தோலாய் உழைத்தும்
பணம் என்னும்
தோழன் அற்றவன்
நான் ...............!
வளரும் போதே
ஏளனம் என்னும்
வார்த்தை அறிந்தவன்
நான்..................!
ஏக்கம் என்பது
என் பிறப்புரிமை
எட்டி உதைத்தாலும்
தாங்குவேன் அது
என் பிறப்பின் வலிமை
நானும் இங்கு
ஒருவன்
ஆனால் நாதி
அற்ற ஒருவன்
- ஏழை
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
