வாழ்க்கை
தவிலின் இருபுறத்து
தோல்களாய்
கணவனும் மனைவியும்
குறுக்கும் நெடுக்குமாய்
இணைக்கின்ற கயிறுகளாய்
சுற்றமும் நட்பும் !
இனைகோடுகளான
இன்பத்தையும் துன்பத்தையும்
தவிலின் இடைப்பட்ட
வெற்றிடம் போன்று
இறைவனின் துணையுடன்
ஏற்றுக்கொண்டால்
மத்தளத்தின் ஓசைபோன்று
மகிழ்ச்சியுடன் மண்ணில்
நாமும் வாழலாமே!