அழகான வாழ்க்கை ஆனந்தமாய்
தோழர்களே ,
சிந்தனை மிகுந்த இவ்வுலகில்
சிரிப்பதற்கு சிறு இடம் கொடுங்கள்
கவலைகளை மறந்து களித்திடுங்கள்
கவலைகள் இராமல் இருக்காது
பிறப்பு என்பது ஒரு முறை தான்-தயவு செய்து
பிரித்துக் கொள்ளாதீர்கள் உங்கள் உயிர்களை
பயன்படுத்துங்கள் கிடைக்கும் வாய்ப்புகளை
பணிவுடன் செயல்படுங்கள் வாய்ப்பு கொடுப்பவரிடம்
துணிவுடன் இருங்கள் உங்கள் செயலில்
துவண்டு விடாதீர்கள் துன்பத்தைக் கண்டு
முயற்சி எடுங்கள்
முடிவில் வெற்றிக்கனி
உங்கள் கைகளில் -----------
-----------------------நன்றி!