ஆன்மாவின் அடர்த்தியில் அமர்வேன் - இராஜ்குமார்

ஆன்மாவின் அடர்த்தியில் அமர்வேன்
=================================

நிழலை நானே வருத்தி - அதில் உன்
நினைவை தைத்து வைத்தேன்

உலர்ந்த என்னுதடு
அசையா மௌனத்தில்
வார்த்தை கற்பனையை
காற்றில் தொலைத்தது ..!

அறியப்படாத எந்தன்
அனுபவம் அனைத்தும்
உந்தன் பாதச்சுவட்டின்
உரசலில் உயிர் பெறும்..!

அதுவரை ..

நான் எழுதியவை எல்லாம்
தேகம் பிரியும் ஆன்மாவின்
அடர்த்தியான பகுதியில்
அமர்ந்தே இருக்கும் ....

- இராஜ்குமார்


நாள் : 09 - 10 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (29-Sep-14, 1:15 pm)
பார்வை : 77

மேலே