தாய்

தட்டுத்தடுமாறி
நீ நடக்க,
தாவி அணைத்தால்
தாய்.

பொக்கைவாய்
ஜொள்ளுவிட,
துடைத்து மகிழ்ந்தாள்
தாய்.

பால் பல் முளைத்து
கடித்திட
வலியிலும்,
சிரித்தாள்
தாய்.

அம்மா என்ற
உன் மழலை அழைப்பில்
ஊரை அழைத்து,
அகமகிழ்ந்தாள்
தாய்.

இன்று
அதே செய்கை
உன் வயதான தாயிடம்
ஏனோ
ரசிக்க மறந்து,
சகிக்கிறாய்.

கருவறை தந்தவளுக்கு
உன் மன அறையில் கூட
இடம் இல்லையா,
முதியோர் இல்லத்தில்
முகவரியின்றி.

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (21-Nov-14, 8:16 pm)
சேர்த்தது : ரா.ஸ்ரீனிவாசன்
Tanglish : thaay
பார்வை : 259

மேலே